மேலும்

வரவுசெலவுத் திட்ட வாக்கெடுப்புக்கு முன்னதாக ஐதேக – கூட்டமைப்பு அவசர சந்திப்பு

சிறிலங்கா அரசாங்கத்தின் 2019ஆம் ஆண்டுக்கான வரவுசெலவுத் திட்டத்தின் இரண்டாவது வாசிப்பின் மீது வாக்கெடுப்பு நடத்தப்படவுள்ள நிலையில், ஐதேகவுக்கும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கும் இடையில் அவசர பேச்சுக்கள் நடத்தப்பட்டு வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

வடக்கு- கிழக்கு மக்களின் பிரச்சினைகளுக்கு அரசாங்கம் தீர்வு காணாவிட்டால், வரவுசெலவுத் திட்டத்துக்கு எதிராக வாக்களிப்போம் என்று கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் மாவை. சேனாதிராசா நேற்று எச்சரித்திருந்தார்.

இன்று மாலை வரவுசெலவுத் திட்டத்தின் இரண்டாவது வாசிப்பின் மீது வாக்கெடுப்பு நடத்தப்படவுள்ளது.

இந்த நிலையிலேயே, கூட்டமைப்பின் ஆதரவை உறுதிப்படுத்திக் கொள்வதற்கான அவசர சந்திப்பை ஐதேக நடத்தி வருவதாக கூறப்படுகிறது.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் ஆதரவு கிடைக்காது போனால் வரவுசெலவுத் திட்டம் தோற்கடிக்கப்படும் நிலை ஏற்படும் என்பது குறிப்பிடத்தக்கது.

2 கருத்துகள் “வரவுசெலவுத் திட்ட வாக்கெடுப்புக்கு முன்னதாக ஐதேக – கூட்டமைப்பு அவசர சந்திப்பு”

  1. Janci Janci
    Janci Janci says:

    அரசியல் கைதிகள் விடுதலை உடனடியாக. நடைமுறபடுத்த வேண்டும் இல்லையென்றால் ஆதரவாக வாக்களிக்க வேண்டாம்

  2. Sandrasekaran Ravinthiran
    Sandrasekaran Ravinthiran says:

    யார் என்ன கூறிநாலும் கூட்டணி வாக்களிக்கும் என்று நம்புவோமாக.

Leave a Reply to Janci Janci Cancel reply

Your email address will not be published. Required fields are marked *