119 வாக்குகளுடன் நிறைவேறியது வரவுசெலவுத் திட்டம்
சிறிலங்கா அரசாங்கத்தின் 2019ஆம் ஆண்டுக்கான வரவுசெலவுத் திட்டத்தின் இரண்டாவது வாசிப்பு 119 வாக்குகளுடன் நிறைவேற்றப்பட்டுள்ளது.
சற்று முன்னர் நடத்தப்பட்ட வாக்கெடுப்பில், வரவுசெலவுத் திட்டத்துக்கு ஆதரவாக 119 வாக்குகள் அளிக்கப்பட்டுள்ளன. வரவுசெலவுத் திட்டத்துக்கு எதிராக 76 வாக்குகள் மாத்திரம் அளிக்கப்பட்டன.
ஐக்கிய தேசிய முன்னணி அரசாங்கத்துக்கு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு ஆதரவு அளித்தது. ஆறுமுகன் தொண்டமானும் வரவுசெலவுத் திட்டத்துக்கு ஆதரவாக வாக்களித்தார்.
ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியைச் சேர்ந்த மகிந்த ஆதரவு உறுப்பினர்கள் ஜேவிபி உறுப்பினர்கள் வரவுசெலவுத் திட்டத்துக்கு எதிராக வாக்களித்தனர்.
சிறிலங்கா சுதந்திரக் கட்சி உறுப்பினர்கள் வாக்கெடுப்பில் பங்கேற்கவில்லை.