மேலும்

மன்னார் புதைகுழி அகழ்வை இடைநிறுத்த நீதிமன்றம் உத்தரவு

மன்னாரில் கண்டுபிடிக்கப்பட்ட  மனிதப் புதைகுழியின்  அகழ்வுப் பணிகளை இடைநிறுத்துமாறு,  மன்னார் நீதிவான் சரவணராஜா இன்று உத்தரவிட்டுள்ளார்.

மன்னார் நகர நுழைவாயிலில் கண்டுபிடிக்கப்பட்ட மனிதப் புதைகுழியில் 335 மனித எலும்புக்கூடுகள் கண்டுபிடிக்கப்பட்டிருந்தன.

இந்த எலும்புக்கூடுகளில் இருந்து ஆறு மாதிரிகள் அமெரிக்காவின் புளோரிடாவில் உள்ள பீட்டா ஆய்வகத்துக்கு அனுப்பப்பட்டு,  றேடியோ கார்பன் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.

அந்த எலும்புகள் அண்மைக்காலத்தில் புதைக்கப்பட்டவை அல்ல என்றும், 1499 ஆம் ஆண்டுக்கும், 1719 ஆண்டுக்கும் இடைப்பட்டவை என்றும் றேடியோ கார்பன் ஆய்வின் மூலம் கண்டறியப்பட்டது.

இதையடுத்து, புதைகுழி அகழ்வுப் பணிகளை மறு அறிவித்தல் வரும் வரை, இடைநிறுத்துமாறு மன்னார் நீதிவான், இன்று உத்தரவிட்டார்.

நீதிமன்ற உத்தரவை அடுத்து  தாம் அந்தப் பகுதியில் இருந்து விலகிக் கொள்ளவுள்ளதாக, அகழ்வுப் பணிகளை முன்னெடுத்த, சட்ட மருத்துவ அதிகாரி சமிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *