இன்று வெளியாகிறது ஐ.நா மனித உரிமை ஆணையாளரின் அறிக்கை
ஐ.நா மனித உரிமை ஆணையாளரின் சிறிலங்கா தொடர்பான அறிக்கை, இன்று பகிரங்கப்படுத்தப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
2007ஆம் ஆண்டு மார்ச் மாதம் ஐ.நா மனித உரிமைகள் பேரவையில் நிறைவேற்றப்பட்ட 34/1 தீர்மானத்தின் அடிப்படையில், அந்த தீர்மானத்தில் ஏற்றுக்கொள்ளப்பட்ட விடயங்கள் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளதா என்பது குறித்த அறிக்கையை ஐ.நா மனித உரிமை ஆணையாளர் பேரவையின் இந்தக் கூட்டத்தொடரில் சமர்ப்பிக்க வேண்டும்.
வரும் 20ஆம் நாள் ஐ.நா மனித உரிமைகள் பேரவையில் அதிகாரபூர்வமாக சமர்ப்பிக்கப்படவுள்ள இந்த அறிக்கை நேற்று சிறிலங்கா அரசாங்கத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டது.
இன்று இந்த அறிக்கை பகிரங்கமாக ஐ.நா மனித உரிமை ஆணையாளர் பணியகத்தினால் வெளியிடப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.