சிறிலங்காவில் வைபர் தடை நீங்கியது – முகநூலுக்குப் புதிய கட்டுப்பாடுகள்
வெறுப்புணர்வைத் தூண்டும் கருத்துக்கள் வெளியிடுவதை தடுக்கும் வகையில், முகநூல் பயன்பாட்டுக்கு சிறிலங்காவில் கட்டுப்பாடுகள் விதிக்கப்படவுள்ளன.
சிறிலங்காவில் இன வன்முறைகள் தீவிரமடைந்ததை அடுத்து, கடந்த 7ஆம் நாள், முகநூல், வைபர், வட்ஸ்அப் போன்ற சமூக வலைத்தளங்களுக்குத் தடை விதிக்கப்பட்டது.
நேற்று நள்ளிரவில் இருந்து வைபர் மீதான தடை நீக்கப்பட்டுள்ளது.
எனினும், முகநூல் மீதான தடை தொடர்ந்தும் நீடித்து வருகிறது. நாளை கொழும்பு வரும், முகநூல் நிறுவன அதிகாரிகள், சிறிலங்கா அரசாங்கத்துடன் பேச்சு நடத்தவுள்ளனர்.
எவ்வாறு முகநூல் கருத்துக்களை கட்டுப்படுத்துவது என்பது குறித்து அவர்கள் பேச்சுக்களை நடத்தவுள்ளனர்.
இதையடுத்து, முகநூலில் இனவாதத்தைத் தூண்டும் கருத்துக்களை வெளியிடுவதற்கான கட்டுப்பாடுகள் தீவிரப்படுத்தப்படும் என்று தெரியவருகிறது.