மேலும்

போர் முடிந்தாலும் முடியாத அகதிவாழ்வு – இன்னமும் அகதிகளாக 1.71 இலட்சம் இலங்கையர்கள்

Refugeesசிறிலங்காவில் உள்நாட்டுப் போர் முடிவுக்கு வந்து ஐந்து ஆண்டுகள் கடந்து விட்டாலும், 1.71 இலட்சத்துக்கும் அதிகமானோர் வெளிநாடுகளில் அகதிகளாகவும், புகலிடம் கோருவாராகவும், உள்நாட்டு அகதிகளாகவும் இருப்பதாக ஐ.நா தெரிவித்துள்ளது.

அகதிகளுக்கான ஐ.நா உயர் ஆணையர் பணியகம் இன்று வெளியிட்டுள்ள 2014ம் ஆண்டுக்கான அகதிகள் தொடர்பான புள்ளிவிபரம் ஒன்றிலேயே இந்த தகவல் வெளியிடப்பட்டுள்ளது.

சிறிலங்காவைச் சேர்ந்த 1,23,028 பேர், அகதிகளாக உள்ள அதேவேளை,மேலும், 16,190 பேர் புகலிடம் கோரிகளாகவும் இருக்கின்றனர். 30,847  பேர் உள்நாட்டில் இடம்பெயர்ந்துள்ளனர்.

இவ்வாறு அகதிகளாக உள்ள கவலைக்குரிய இலங்கையர்களின் மொத்த எண்ணிக்கை 1,71,645 பேர் என்றும் ஐ.நா தெரிவித்துள்ளது.

2013ம் ஆண்டுக்கான அகதிகள் பற்றி தரவுகளின் படி, அகதிகளாக உள்ள கவலைக்குரியவர்களின் எண்ணிக்கை 2,36,444 ஆக இருந்தது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *