மேலும்

Archives

இலங்கையில் அழிக்கப்படும் பெருங்கற்கால தமிழர்களின் தொல்லியல் ஆதாரங்கள்

இலங்கையின் கிழக்கு மாகாணம் – அம்பாறை மாவட்டத்தின் சங்கமன் கண்டி பிரதேசத்துக்கு அருகேயுள்ள காட்டுப் பகுதியில் காணப்படும், தமிழ் மொழியைப் பேசிய பெருங்கற் பண்பாட்டு மக்கள் வாழ்ந்தமைக்கான தொல்லியல் ஆதாரங்கள் சூறையாடப்பட்டும், அழிவடைந்தும் வருகின்றமையினால், அவற்றினைப் பாதுகாப்பதற்கான உடனடி நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட வேண்டுமென, அப்பிரதேச மக்கள் வலியுறுத்துகின்றனர்.

திருகோணமலைத் துறைமுகத்தில் இரு அவுஸ்ரேலிய போர்க்கப்பல்கள்

அவுஸ்ரேலிய கடற்படையின் இரண்டு போர்க்கப்பல்கள் நேற்று திருகோணமலை துறைமுகத்தை வந்தடைந்துள்ளன.

சிறிலங்காவுக்கு காலஅவகாசம் வழங்கக் கூடாது – யாழ்ப்பாணத்தில் பாரிய பேரணி

ஐ.நா மனித உரிமைகள் பேரவையின் தீர்மானத்தை நடைமுறைப்படுத்துவதற்கு சிறிலங்காவுக்கு கால அவகாசம் வழங்கக் கூடாது, போர்க்குற்றங்கள் தோடர்பாக அனைத்துலக விசாரணை நடத்தப்பட வேண்டும், சிறிலங்கா விவகாரத்தை ஐ.நா பாதுகாப்புச் சபையிடம் பாரப்படுத்த வேண்டும் ஆகிய கோரிக்கைகளை முன்வைத்து யாழ்ப்பாணத்தில் இன்று பாரிய பேரணி நடத்தப்பட்டது.

பாரிய கூட்டுப் பயிற்சிக்காக 1000 அவுஸ்ரேலிய படையினர் 4 போர்க்கப்பல்களுடன் சிறிலங்கா வருகை

சிறிலங்கா படைகளுடன் பாரிய கூட்டுப் பயிற்சிகளில் பங்கேற்பதற்காக, 1000 அவுஸ்ரேலியப் படையினரும், நான்கு போர்க்கப்பல்கள் மற்றும் விமானங்களும், அடுத்தவாரம் சிறிலங்கா வரவுள்ளனர்.

சிறிலங்காவின் இரு முன்னாள் கடற்படைத் தளபதிகளுக்கு  உயர்பதவிகள்

சிறிலங்காவின் இரண்டு முன்னாள் கடற்படைத் தளபதிகள் அரசாங்கத்தின்  உயர் பதவிகளில் நியமிக்கப்பட்டுள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.

நிறைவேற்று அதிகாரத்தை ஒழிக்கும் ஜேவிபியின் முயற்சிக்கு ஆதரவு – இரா.சம்பந்தன்

நிறைவேற்று அதிகார அதிபர் ஆட்சி முறையை ஒழிப்பதற்கு, ஜேவிபி மேற்கொள்ளும் முயற்சிகளுக்கு, தமிழ் தேசிய கூட்டமைப்பு ஆதரவு வழங்கும் என்று கூட்டமைப்பின் தலைவர்,  இரா.சம்பந்தன் தெரிவித்துள்ளார்.

இந்திய எல்லை அருகே பாக்கு நீரிணையில் படம் பிடித்த சீன அதிகாரிகள் குழு

சிறிலங்காவுக்கான சீனத் தூதுவர் செங் ஷியுவான் தலைமையிலான சீன அதிகாரிகள் குழு, தலைமன்னார் இறங்குதுறைப் பகுதி மற்றும், இந்திய எல்லைப் பகுதியில் உள்ள மணல் திட்டுகளைச் சென்று பார்வையிட்டுள்ளனர்.

வடக்கிற்குப் படையெடுக்கும் வெளிநாட்டு இராஜதந்திரிகள்

ஐ.நா மனித உரிமைகள். பேரவையில் சிறிலங்கா குறித்த முக்கியமான விவாதம் நடக்கவுள்ள நிலையில், கொழும்பில் உள்ள வெளிநாட்டுத் தூதுவர்கள் மற்றும் இராஜதந்திரிகள் வடக்கிற்குப் படையெடுத்து வருகின்றன.

யாழ்ப்பாணத்தில் அமெரிக்க தூதுவர் – காணிகள் விடுவிப்பு குறித்து வெளியிட்ட கருத்து

வடக்கில் இன்னமும் காணிகள் விடுவிப்பு இடம்பெற வேண்டும் என்று சிறிலங்காவுக்கான அமெரிக்க தூதுவர் அலெய்னா ரெப்லிட்ஸ் தெரிவித்துள்ளார்.

வடக்குடன் உறவுகளை விரிவுபடுத்த சீன தூதுவர் திட்டம்

சிறிலங்காவுக்கான சீன தூதுவர் செங் ஷியுவான் வடக்கு மாகாணத்தில் இரண்டு நாட்கள் பயணம் மேற்கொண்டு பல்வேறு தரப்பினரையும் சந்தித்துக் கலந்துரையாடியுள்ளார்.