மேலும்

Archives

விக்னேஸ்வரனின் பெயரைக் கெடுக்க முயன்ற இந்திய ஆங்கில நாளிதழ் – உண்மை நிலை

பிரேமானந்தா ஆசிரம வழக்கில் ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டவர்களை விடுதலை செய்யுமாறு இந்தியப் பிரதமரிடம் வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் கோரிக்கை விடுக்கவில்லை என்று வடக்கு மாகாணசபை வட்டாரங்கள் தகவல் வெளியிட்டுள்ளன.

ஐ.நாவுக்கான சிறிலங்காவின் புதிய தூதுவர் ரொகான் பெரேரா – பான் கீ மூன் சந்திப்பு

நியுயோர்க்கில் உள்ள ஐ.நாவுக்கான சிறிலங்காவின் புதிய நிரந்தர வதிவிடப் பிரதிநிதியாக நியமிக்கப்பட்டுள்ள அம்ரித் ரொகான் பெரேரா, ஐ.நா பொதுச் செயலர் பான் கீ மூனைச் சந்தித்துப் பேச்சு நடத்தியுள்ளார்.

கோத்தாவுக்கு ஆதரவாக ஆர்ப்பாட்டம் நடத்தியவர்கள் கையில் சர்ச்சைக்குரிய சிங்கக்கொடி

கோத்தாபய ராஜபக்சவுக்கு ஆதரவாக கொழும்பில் இன்று நடத்தப்பட்ட ஆர்ப்பாட்டத்தின் போது, எதிர்க்கட்சி அரசியல்வாதிகளும், ஆதரவாளர்களும், சிறுபான்மை இனங்களை அடையாளப்படுத்தும் பகுதிகள் நீக்கப்பட்ட சிறிலங்காவின் தேசியக்கொடியை வைத்திருந்தது குறித்து விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

ஆணைக்குழுவை விட்டு வெளியேறினார் கோத்தா – விசாரணைக்கு 90 நாள் காலஅவகாசம்

இலஞ்ச ஊழல் ஒழிப்பு ஆணைக்குழுவின் முன்பாக இன்று காலை முன்னிலையாக முன்னாள் பாதுகாப்புச் செயலர் கோத்தாபய ராஜபக்சவுக்கு மேலதிக காலஅவகாசம் வழங்கப்பட்டுள்ளதையடுத்து, அவர் அங்கிருந்து வெளியேறினார்.

கோத்தாவிடம் விசாரணை – வெளியே தடையை மீறி எதிர்ப்பு ஆர்ப்பாட்டம்

முன்னாள் பாதுகாப்புச் செயலர் கோத்தாபய ராஜபக்ச இலஞ்ச ஊழல் ஒழிப்பு ஆணைக்குழுவின் விசாரணைக்குச் சமூகமளித்துள்ளார். இன்று காலை சுமார் 9.30 மணியளவில் அவர் ஆணைக்குழுவின் பணயகத்துக்கு வருகை தந்தார்.

“நான் இன்னும் ஓய்வுபெறவில்லை” – மீண்டும் வருவேன் என்று சூசகமாக மிரட்டுகிறார் மகிந்த

தாம் இன்னமும் அரசியலில் இருந்து ஓய்வுபெறவில்லை என்று, சிறிலங்காவின் முன்னாள் ஆட்சியாளர் மகிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார். ஏஎவ்பி செய்தியாளர் அமால் ஜெயசிங்கவுக்கு நேற்று அளித்த செவ்வி ஒன்றிலேயே அவர் இவ்வாறு கூறியுள்ளார்.

சிறைக்குள் அடைக்கப்பட்டார் முன்னாள் அமைச்சர் பசில் ராஜபக்ச – மே 05 வரை விளக்கமறியல்

திவிநெகும திணைக்களத்தில் இடம்பெற்ற மோசடிகள் தொடர்பாக கைது செய்யப்பட்டுள்ள சிறிலங்காவின் முன்னாள் பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் பசில் ராஜபக்ச, மே 5ம் நாள் வரை விளக்கமறியலில் வைக்க உத்தரவிடப்பட்டதையடுத்து, கொழும்பு விளக்கமறியல் சிறைச்சாலையில் அடைக்கப்பட்டுள்ளார்.

நாடாளுமன்றம் இப்போது கலைக்கப்படாது – மேற்குலக தூதுவர்களிடம் மைத்திரி உறுதி

அரசியலமைப்புத் திருத்தங்களை நாடாளுமன்றத்தில் நிறைவேற்றிய பின்னரே, நாடாளுமன்றத்தைக் கலைத்து தேர்தல் நடத்த தாம் திட்டமிட்டுள்ளதாக, சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன, மேற்கு நாட்டுத் தூதுவர்களிடம் தெரிவித்துள்ளார்.

விசாரணைக்குச் சென்ற பசில் ராஜபக்ச கைது

சிறிலங்காவின் முன்னாள் பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் பசில் ராஜபக்ச நிதிக்குற்ற விசாரணைப் பிரிவு காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

விசாரணைக்குழுவை அனுப்புவது குறித்து உக்ரேனியத் தூதுவருடன் மங்கள பேச்சு

சிறிலங்கா வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீரவை, புதுடெல்லியில் உள்ள உக்ரேனியத் தூதுவர் ஒலெக்சான்டர் செவ்சென்கோ நேற்று கொழும்பில் சந்தித்துப் பேச்சு நடத்தினார்.