33 மாணவர்களுடன் நேபாளத்தில் இருந்து திரும்புகிறது சிறிலங்கா விமானப்படை விமானம்
நேபாளத்துக்கு உதவிப் பொருட்களையும், மீட்பு அணியொன்றையும் ஏற்றிச் சென்ற சிறிலங்கா விமானப்படையின் சி-130 விமானம், காத்மண்டுவில் இருந்து 33 மாணவர்களுடன் இன்று கட்டுநாயக்கவுக்குத் திரும்பும் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.










