மேலும்

ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் பிளவை வெளிப்படுத்திய தேர்தல் அறிக்கை வெளியீடு

UPFA-manifastoஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் தேர்தல் அறிக்கை இன்று கொழும்பில் இன்று நடந்த நிகழ்வில் முன்னாள் அதிபர் மகிந்த ராஜபக்சவினால் வெளியிடப்பட்டது.

முன்னதாக, ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் தேர்தல் அறிக்கை, சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேனவிடம், கூட்டணியில் இடம்பெற்றுள்ள கட்சிகளின் தலைவர்களால் கையளிக்கப்பட்டது.

அதிபர் செயலகத்தில் இன்று காலையில், தேர்தல் அறிக்கையைக் கையளிக்கும் நிகிழ்வில், ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் முக்கிய தலைவர்களாக  சுசில் பிரேம்ஜெயந்த, அனுர பிரியதர்சன யாப்பா,தினேஸ் குணவர்த்தன, பேராசிரியர் திஸ்ஸ விதாரண, டியூ,குணசேகர, டிலான் பெரேரா. டலஸ் அழகப்பெரும, பிரபா கணேசன், ஏ.எச்.எம்.பௌசி ஆகியோர் கலந்து கொண்டனர்.

எனினும், இந்தக் கூட்டணியில் இடம்பெற்றுள்ள தேசிய சுதந்திர முன்னணியின் தலைவர் விமல் வீரவன்ச, லிபரல் கட்சியின் பேராசிரியர் ராஜீவ விஜேசிங்க ஆகியோர் மைத்திரிபால சிறிசேனவுடனான சந்திப்பில் பங்கேற்கவில்லை.

அத்துடன், ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் தேர்தல் செயற்பாட்டுக்குழுத் தலைவராகத் தெரிவு செய்யப்பட்ட மகிந்த ராஜபக்சவும் இந்த நிகழ்வில் பங்கேற்றிருக்கவில்லை.

UPFA-manifasto (1)

UPFA-manifasto (2)UPFA-manifasto (3)

இதையடுத்து, கொழும்பு, ஹென்றி பெட்றிஸ் மைதானத்தில், மகிந்த ராஜபக்ச தலைமையில் தேர்தல் அறிக்கை வெளியீட்டு நிகழ்வு இடம்பெற்றது.

இந்த நிகழ்வில் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் தலைவர் மைத்திரிபால சிறிசேன கலந்து கொள்ளவில்லை.

அத்துடன், எதிர்க்கட்சித் தலைவர் நிமால் சிறிபால டி சில்வாவும் இன்றை நிகழ்வுகளில் கலந்து கொள்ளவில்லை.

அதேவேளை, ஹென்றி பெட்றிஸ் மைதானத்தில் நடந்த தேர்தல் அறிக்கை வெளியீட்டு நிகழ்வில், முன்னாள் நீதியரசர் சரத் என். சில்வா, முன்னாள் இராஜதந்திரி தயான் ஜெயதிலக, பேராசிரியர் ராஜீவ விஜேசிங்க, விமல் வீரவன்ச உள்ளிட்ட கூட்டணிக்கட்சிகளின் தலைவர்கள் பங்கேற்றிருந்தனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *