மேலும்

Archives

பாகிஸ்தானுடனும் அணுசக்தி உடன்பாடு செய்து கொண்டது சிறிலங்கா – விபரங்கள் இரகசியம்

பாகிஸ்தானுடன் சிறிலங்கா அரசாங்கம் இன்று அணுசக்தி ஒத்துழைப்பு உடன்பாடு உள்ளிட்ட ஆறு புரிந்துணர்வு உடன்பாடுகளில் கையெழுத்திட்டுள்ளது. 

சிறிலங்கா அதிபரை விமானப்படைத் தளத்தில் வரவேற்றார் பாகிஸ்தான் பிரதமர்

மூன்று நாள் பயணமாக இன்று முன்னிரவில் பாகிஸ்தானின் தலைநகர் இஸ்லாமாபாத்தை சென்றடைந்த சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேனவை, பாகிஸ்தான் பிரதமர் நவாஸ் ஷரீப், விமானப்படைத் தளத்தில் நேரடியாகச் சென்று வரவேற்றார்.

இறுதிப் போரில் உயிர்நீத்தோருக்கு அமெரிக்கா சார்பில் முள்ளிவாய்க்காலில் இறுதி வணக்கம்

சிறிலங்காவில் இறுதிக்கட்டப் போர் நடந்த முள்ளிவாய்க்காலில், அமெரிக்க இராஜாங்கத் திணைக்கள உதவிச்செயலர் ரொம் மாலினோவ்ஸ்கி நேற்று உயிரிழந்த இருதரப்பினருக்காகவும் மலர் தூவி இறுதிவணக்கம் செலுத்தினார்.

மூத்த படை அதிகாரிகளுக்கான கட்டுப்பாடுகளை தளர்த்துமாறு அமெரிக்காவிடம் சிறிலங்கா கோரிக்கை

அமெரிக்க பயிற்சித் திட்டங்களில் சிறிலங்கா படை அதிகாரிகளுக்கு, வாய்ப்பளிப்பது தொடர்பான கொள்கையை அமெரிக்கா மீளாய்வு செய்ய வேண்டும் என்று, சிறிலங்கா கோரிக்கை விடுத்துள்ளது.

அமெரிக்க உதவி இராஜாங்கச் செயலர் ரொம் சிறிலங்கா அமைச்சர்களுடன் பேச்சு

சிறிலங்காவுக்குப் பயணம் மேற்கொண்டுள்ள, அமெரிக்க இராஜாங்கத் திணைக்களத்தின், ஜனநாயகம், மனித உரிமைகள், தொழிலாளர் விவகாரங்களுக்கான உதவிச் செயலர் ரொம் மாலினோவ்ஸ்கி நேற்று சிறிலங்கா அமைச்சர்களுடன் பேச்சுக்களை நடத்தியுள்ளார்.

வடக்கு மாகாண முதல்வருடன் ஐ.நா சிறப்பு அறிக்கையாளர் சந்திப்பு

நல்லிணக்க செயல்முறைகளுக்கு உதவும் நோக்கில், ஆறு நாள் பயணமாக சிறிலங்கா வந்துள்ள ஐ.நாவின் உண்மையை ஊக்குவித்தல், நீதி, இழப்பீடுகள் மற்றும், மீள உருவாகாமல் உத்தரவாதப்படுத்தலுக்கான சிறப்பு அறிக்கையாளரான பப்லோ டி கிரெய்ப் இன்று வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரனை  சந்தித்துப் பேச்சு நடத்தினார்.

திருமலை கடற்பரப்பில் இந்திய- சிறிலங்கா கடற்படைக் கப்பல்கள் போர்ப்பயிற்சி

திருக்கோணமலைக்குப் பயணம் மேற்கொண்டிருந்த இந்தியக் கடற்படையின் நான்கு கப்பல்கள், சிறிலங்கா கடற்படையுடன் இணைந்து நேற்றுக்காலை பாரிய போர்ப்பயிற்சி ஒன்றில் ஈடுபட்டன.

போருக்குப் பின்னரும் பிளவுபட்டுக் கிடக்கும் வடக்கும் தெற்கும் – அமெரிக்க ஊடகப் பார்வை

தமிழ்ப் போராளிகளின் சாதனைகளை நாங்கள் பேருந்துகளில் சென்று கொண்டாடினால் சிங்களவர்களின் உணர்வுகள் எப்படியிருக்கும் என நான் அடிக்கடி நினைப்பேன்’ என கிளிநொச்சியைச் சேர்ந்த பெண்கள் ஒத்துழைப்பிற்கான ஒருங்கிணைப்பாளரான 50 வயதான கிறிஸ்ரி சாந்தினி தெரிவித்தார்.

கோடரியால் வெட்டப்பட்ட மைத்திரியின் சகோதரர் மரணம்

பொலன்னறுவவில் நேற்றுமுன்தினம் இரவு கோடரியால் வெட்டப்பட்டு, படுகாயமடைந்த நிலையில், உயிருக்குப் போராடி வந்த சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேனவின் சகோதரர், பிரியந்த சிறிசேன( 43 வயது) இன்று அதிகாலை உயிரிழந்தார்.

திருக்கோணமலைத் துறைமுகத்தில் 4 இந்தியக் கடற்படைக் கப்பல்கள்

இந்தியக் கடற்படை மற்றும் கடலோரக் காவல்படையின் நான்கு கப்பல்கள் நேற்று திருக்கோணமலைத் துறைமுகத்துக்கு பயிற்சிக்காக வந்துள்ளன.