நைஜீரியாவுக்கு 9 ரோந்துப் படகுகளை விற்பனை செய்தது சிறிலங்கா கடற்படை
சிறிலங்கா கடற்படை உள்நாட்டில் தயாரித்த, ஒன்பது கரையோர ரோந்துப் படகுகளை நைஜீரியாவுக்கு விற்பனை செய்துள்ளது. வெலிசறையில் உள்ள படகு கட்டுமான தளத்தில் நேற்று நடந்த நிகழ்வு ஒன்றில், நைஜீரியத் தூதுவர், அகமட்டிடம், சிறிலங்கா கடற்படை அதிகாரிகளால் இந்தப் படகுகள் கையளிக்கப்பட்டன.










