மேலும்

Archives

அமெரிக்க – இந்தியா உயர்மட்டப் பேச்சில் சிறிலங்கா குறித்தும் கவனம்

வொசிங்டனில் கடந்த வாரம், அமெரிக்க- இந்திய உயர் அதிகாரிகளுக்கு இடையே நடைபெற்ற முக்கிய பேச்சுவார்த்தைகளில், சிறிலங்கா விவகாரம் குறித்தும் கலந்துரையாடப்பட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

சம்பிக்க ரணவக்கவுக்கு மீண்டும் விளக்கமறியல்

வீதி விபத்தை ஏற்படுத்தி விட்டு, சாரதியின் மீது பழி போட்டு விட்டுத் தப்பிக்க முயன்றார் என்ற குற்றச்சாட்டில், கைது செய்யப்பட்ட முன்னாள் அமைச்சர் சம்பிக்க ரணவக்கவை தொடர்ந்தும் விளக்கமறியலில் வைக்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

அரசியல் பழிவாங்கல் ஆரம்பம் –  அரசுக்கு எதிராக கடும் விமர்சனங்கள்

முன்னாள் அமைச்சர் சம்பிக்க ரணவக்க கைது செய்யப்பட்ட சம்பவம்,  புதிய அரசாங்கத்தின் அரசியல் பழிவாங்கல் நடவடிக்கை என்று கடுமையான விமர்சனங்கள் எழுந்துள்ளன.

சட்டமுறைகளுக்கு மாறாக நடந்த கைது

முன்னாள் அமைச்சர் சம்பிக்க ரணவக்க கைது செய்யப்பட்ட விவகாரத்தில் முறையான நடைமுறைகள் பின்பற்றப்படவில்லை என்று குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன.

சிறிலங்கா பிரதமரைச் சந்தித்த இந்திய தூதுவர்

சிறிலங்கா பிரதமர் மகிந்த ராஜபக்சவை, கொழும்புக்கான இந்திய தூதுவர் தரன்ஜித் சிங் சந்து சந்தித்துப் பேச்சு நடத்தியுள்ளார்.

சம்பிக்க ரணவக்கவுக்கு விளக்கமறியல்

கொழும்பு குற்றப் பிரிவு காவல்துறையினரால் நேற்றிரவு கைது செய்யப்பட்ட முன்னாள் அமைச்சர் சம்பிக்க ரணவக்க இன்று வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.

சிறிலங்கா பாதுகாப்புச் செயலருடன் அமெரிக்க தூதுவர் சந்திப்பு

சிறிலங்கா பாதுகாப்புச் செயலர் மேஜர் ஜெனரல் கமல் குணரத்னவை, அமெரிக்க தூதுவர் அலய்னா ரெப்லிட்ஸ் சந்தித்துக் கலந்துரையாடியுள்ளார். சிறிலங்கா பாதுகாப்பு அமைச்சில் நேற்று இந்தச் சந்திப்பு இடம்பெற்றுள்ளது.

சிறிலங்கா அதிபர் செயலகத்தில் பிளாஸ்டிக் குடிநீர் போத்தல்களுக்கு தடை

சிறிலங்கா அதிபர் செயலகத்தில் பிளாஸ்டிக் குடிநீர் போத்தல்களுக்குப் பதிலாக கண்ணாடிக் குவளைளகளில் குடிநீர் வழங்குமாறு சிறிலங்கா அதிபர் கோத்தாபய ராஜபக்ச, சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு அறிவுறுத்தியுள்ளார்.

தீங்கிழைக்கும் நோக்கம் இல்லை – கோத்தாவிடம் கூறிய சுவிஸ் தூதுவர்

சிறிலங்காவுக்கு தீங்கிழைக்கும் நோக்கம் எதுவும் கிடையாது என்று சுவிஸ் தூதுவர் ஹான்ஸ்பீற்றர் மொக், சிறிலங்கா அதிபர் கோத்தாபய ராஜபக்சவிடம் தெரிவித்தார் என, அதிபர் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

‘கடத்தல் நடக்கவேயில்லை – நான் தான் பலிக்கடாவாகி விட்டேன்’

கொழும்பில் உள்ள சுவிஸ் தூதரகத்தின் உள்ளூர் பணியாளர் ஒருவர் கடத்தப்பட்டு அச்சுறுத்தப்பட்டதாகக் கூறப்படும் சம்பவம் நடக்கவேயில்லை என்பது தெளிவாகத் தெரிகிறது என சிறிலங்கா அதிபர் கோத்தாபய ராஜபக்ச தெரிவித்தார்.