மேலும்

Archives

அனோஜன் விவகாரம் – நாளை நாடாளுமன்றில் சிறப்பு அறிக்கை

சவூதி அரேபியாவில் மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ள  சிவராசா அனோஜன் விவகாரம் குறித்து, சிறிலங்கா வெளிவிவகார அமைச்சர் விஜித ஹேரத் நாளை நாடாளுமன்றத்தில் சிறப்பு அறிக்கை ஒன்றை வெளியிடவுள்ளார்.

சிறிலங்காவுடன் பாதுகாப்பு ஒத்துழைப்புக் குறித்து அமெரிக்க தூதுவர் கலந்துரையாடல்

சிறிலங்கா பாதுகாப்பு பிரதி அமைச்சர் மேஜர் ஜெனரல் அருண ஜயசேகரவை சிறிலங்காவுக்கான அமெரிக்க தூதுவர் எரிக் மேயர் முதல் முறையாக அதிகாரபூர்வமாகச் சந்தித்து பேசியுள்ளார்.

இந்திய, சிறிலங்கா கடற்படைகளின் கூட்டுப் பயிற்சி நாளை ஆரம்பம்

சிறிலங்கா மற்றும் இந்தியக் கடற்படைகளுக்கு இடையில் ஆண்டு தோறும் நடத்தப்படும்  இருதரப்பு கடற்படைப் பயிற்சியான SLINEX 2026- கூட்டுப் பயிற்சி நாளை ஆரம்பமாகவுள்ளது.

இந்தியப் பாதுகாப்பு அமைச்சருக்கு சிறிலங்கா அதிபர் அளித்துள்ள வாக்குறுதி

​இந்தியாவின் பாதுகாப்பு நலன்களுக்குப் பாதகமான எந்தவொரு நடவடிக்கைகளுக்கும், தனது நிலப்பரப்பைப் பயன்படுத்த கொழும்பு ஒருபோதும் அனுமதிக்காது என்று சிறிலங்கா அதிபர் அனுரகுமார திசாநாயக்க இந்தியப் பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங்கிடம் உறுதியளித்துள்ளார்.

மகிந்தவைச் சந்தித்தார் புதிய சீனத் தூதுவர்

சிறிலங்காவுக்கான புதிய சீனத் தூதுவர் வெய் ஹுவாசியாங் (Wei Huaxiang),  சிறிலங்காவின் முன்னாள் அதிபர் மகிந்த ராஜபக்சவை சந்தித்து பேசியுள்ளார்.

இந்திய முப்படைகளின் துணைத் தளபதிகள் அருண ஜயசேகரவுடன் சந்திப்பு

இந்தியப் பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங்குடன் சிறிலங்காவுக்கு பயணம் மேற்கொண்டுள்ள  உயர்மட்ட இந்தியப் பாதுகாப்பு அதிகாரிகள், சிறிலங்காவின் பாதுகாப்பு பிரதி அமைச்சர் மேஜர் ஜெனரல் அருண ஜயசேகரவை சந்தித்துக் கலந்துரையாடியுள்ளனர்.

இறந்த தமிழர்களை சிறிலங்காவினால் இரண்டுமுறை புதைக்க முடியாது

1956ஆம் ஆண்டு நடந்த படுகொலைகள் மற்றும் கறுப்பு ஜூலை முதல் முள்ளிவாய்க்கால் மற்றும் செம்மணி வரை, சிறிலங்காவின் வரலாறு வெறும் அட்டூழியங்களால் மட்டும் களங்கப்படுத்தப்படவில்லை.

100 மில்லியன் ரூபா இலஞ்சம் – நாமல் ராஜபக்சவுக்கு விளக்கமறியல்

இலஞ்ச, ஊழல் குற்றச்சாட்டுகளை விசாரிக்கும் ஆணைக்குழுவால்  கைது செய்யப்பட்ட சிறிலங்கா பொதுஜன பெரமுனவின் தேசிய அமைப்பாளரும், நாடாளுமன்ற உறுப்பினருமான நாமல் ராஜபக்ச,  விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.

காங்கேசன்துறை துறைமுக அபிவிருத்திக்கான புரிந்துணர்வு உடன்பாடு குறித்து பேச்சு

இந்திய அரசாங்கத்தின் ஆதரவுடன், காங்கேசன்துறை துறைமுகத்தை அபிவிருத்தி செய்வதற்கான புரிந்துணர்வு உடன்பாட்டை இறுதி  செய்வதை விரைவுபடுத்த சிறிலங்காவும் இந்தியாவும் நடவடிக்கைகளை எடுத்துள்ளன.

அமெரிக்காவின் தேசிய காவல்படைப் பிரிவுடன் கூடுதல் ஒத்துழைப்பை கோரும் சிறிலங்கா

சிறிலங்கா பாதுகாப்புச் செயலர் எயர் வைஸ் மார்ஷல் சம்பத் துயகொந்தா, அமெரிக்காவின் தேசிய காவல் பிரிவின் தலைவர், ஜெனரல் ஸ்டீவன் நோர்டாஸ் (Chief of the National Guard Bureau of the United States, General Steven Nordhaus) உடன் இருதரப்புப் பேச்சுக்களை நடத்தியுள்ளார்.