மேலும்

Archives

தமிழ்த் தேசியக் கூட்டமைப்புடன் அமெரிக்க நாடாளுமன்றக் குழு சந்திப்பு

சிறிலங்காவுக்குப் பயணம் மேற்கொண்டுள்ள எட்டுப் பேர் கொண்ட அமெரிக்க நாடாளுமன்றக் குழுவினர், நேற்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பிரதிநிதிகளைச் சந்தித்துப் பேச்சு நடத்தினர்.

சிறிலங்கா படைகளுக்கு அமெரிக்கா மீண்டும் பயிற்சி – மேலதிக வாய்ப்புகளை கோருகிறார் மைத்திரி

சிறிலங்கா படையினருக்கு மீண்டும் அமெரிக்கா பயிற்சியளிக்க ஆரம்பித்துள்ளது. இதனை வரவேற்றுள்ள சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன, அவர்களுக்கு மேலதிக பயிற்சி வாய்ப்புகளை வழங்குமாறு, அமெரிக்காவிடம் கோரியுள்ளார்.

அடுத்தடுத்து சிறிலங்காவுக்கு படையெடுக்கும் அமெரிக்க நாடாளுமன்றக் குழுக்கள்

அமெரிக்க நாடாளுமன்ற உறுப்பினர்களின் மற்றொரு குழு நேற்று சிறிலங்காவுக்குப் பயணம் மேற்கொண்டு, உயர்மட்டத் தலைவர்களைச் சந்தித்துப் பேச்சு நடத்தியுள்ளது.

மகிந்த தரப்புடன் சீன குழு இரண்டு சுற்றுப் பேச்சு – கோத்தாவும் பங்கேற்பு

சிறிலங்காவுக்குப் பயணம் மேற்கொண்டுள்ள சீனாவின் உயர் மட்டக் குழுவினர், அம்பாந்தோட்டை முதலீட்டு வலய விவகாரம் உள்ளிட்ட பல்வேறு விடயங்கள் தொடர்பாக சிறிலங்காவின் முன்னாள் ஆட்சியாளர் மகிந்த ராஜபக்சவுடன் பேச்சு நடத்தியுள்ளனர்.

சீன உயர்மட்டக் குழு சிறிலங்கா அதிபர், பிரதமருடன் சந்திப்பு

சீனாவின் உயர்மட்டக் குழுவொன்று சிறிலங்காவுக்குப் பயணம் மேற்கொண்டு, அரசாங்க உயர்மட்டத் தலைவர்களுடன் பேச்சுக்களை நடத்தியுள்ளது.

கூட்டமைப்பை ஏமாற்றமடையச் செய்த இந்தியா

வடக்கு, கிழக்கு மாகாணங்களை மீண்டும் இணைப்பதற்கு, சிறிலங்காவுக்கு இந்தியா அழுத்தம் கொடுக்காது என்று, இந்திய வெளிவிவகாரச் செயலர் எஸ்.ஜெய்சங்கர் தெரிவித்திருப்பது, தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கு ஏமாற்றத்தை ஏற்படுத்தியிருப்பதாக, பிபிசி செய்தி வெளியிட்டுள்ளது.

அபுதாபி பாதுகாப்பு கண்காட்சியில் சிறிலங்கா பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர்

பிந்திய நவீன ஆயுத, தளபாடங்கள் காட்சிப்படுத்தப்பட்டுள்ள, அபுதாபியில் நடைபெறும் ஐடெக்ஸ்-2017 அனைத்துலக பாதுகாப்பு கண்காட்சியில், சிறிலங்கா பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் ருவான் விஜேவர்த்தன பங்கேற்றுள்ளார்.

நிலையான அமைதிக்கு நல்லிணக்கம் முக்கியம் – அமெரிக்க குழுவிடம் சம்பந்தன்

சிறிலங்காவில் நிலையான அமைதியை ஏற்படுத்துவதற்கு நல்லிணக்கம் முக்கியமானது என்று, எதிர்க்கட்சித் தலைவரும், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவருமான இரா.சம்பந்தன் தெரிவித்துள்ளார்.

அமெரிக்க நாடாளுமன்றக் குழு சிறிலங்கா அதிபரைச் சந்திப்பு

அமெரிக்கா நாடாளுமன்ற உறுப்பினர்களின் குழுவொன்று நேற்று சிறிலங்காவுக்குப் பணயம் மேற்கொண்டுள்ளது. நாடாளுமன்ற ஜனநாயக ஒத்துழைப்புத் திட்டத்தின் ஒது அங்கமாக இந்தக் குழுவினர் மூன்று நாட்கள் பயணமாக சிறிலங்கா வந்துள்ளனர்.

சிறிலங்காவுக்கு உடனடி வரட்சி நிவாரணம் – இந்தியா அறிவிப்பு

வரட்சியால் பாதிக்கப்பட்டுள்ள சிறிலங்காவுக்கு 100 மெட்றிக் தொன் அரிசியையும், 8 நீர்த்தாங்கிகளையும் உடனடி உதவியாக இந்தியா வழங்கவுள்ளது.