மேலும்

Archives

683 ஏக்கர் காணிகள் சிறிலங்கா இராணுவப் பிடியில் இருந்து மீண்டன

யாழ். மாவட்டத்தில் மூன்று பத்தாண்டுகளாக சிறிலங்கா இராணுவத்தினரின் வசமிருந்த பொதுமக்களின், 683 ஏக்கர் காணிகள் நேற்று உரிமையாளர்களிடம் கையளிக்கப்பட்டன.

வடக்கில் சிக்குவது புலிகளின் தங்கமா? – சந்தேகம் கிளப்பும் சுங்க திணைக்களம்

வடக்கில் பெருமளவு தங்கக் கட்டிகள் கைப்பற்றப்பட்டு வரும் நிலையில், இவை விடுதலைப் புலிகளால் புதைத்து வைக்கப்பட்டிருந்த தங்கமாக இருக்கலாம் என்று சிறிலங்கா சுங்கத் திணைகக்களப் பேச்சாளர் சந்தேகம் வெளியிட்டுள்ளார்.

7 மாகாண ஆளுனர்கள் மாற்றம் – வடக்கில் வெற்றிடம்

வடக்கு, கிழக்கு தவிர்ந்த ஏனைய ஏழு மாகாணங்களுக்கான புதிய ஆளுனர்கள் இன்று சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன முன்னிலையில் பதவியேற்றுள்ளனர். ஏற்கனவே ஆளுனர்களாக இருந்தவர்களே உள்ளக இடமாற்றங்கள் செய்யப்பட்டுள்ளனர்.

பதில் முதல்வரானார் சர்வேஸ்வரன்

வடக்கு மாகாண பதில் முதலமைச்சராக, கல்வி அமைச்சர் கலாநிதி கந்தையா சர்வேஸ்வரன் நேற்று  பதவியேற்றுள்ளார்.

கவிஞர் கி.பி.அரவிந்தன் நினைவு இலக்கியப் பரிசு : ‘உலகத் தமிழ்க் குறுநாவல் போட்டி 2018’ – முடிவுகள்

காக்கைச் சிறகினிலே இதழின் தொடக்க நெறியாளராகப் பணியாற்றி மறைந்த கவிஞர் ‘கி பி அரவிந்தன்’ கனவின் மீதியில் எழும் தடமாக இந்தப் போட்டி  அமைகிறது. பாரதி கண்ட “சென்றிடுவீர் எட்டுத் திக்கும், கலைச் செல்வங்கள் யாவுங் கொணர்ந்திங்கு சேர்ப்பீர் !” என்ற கனவை நனவாக்கும் முயற்சிகளில் ஒன்றாகவும் தொடரப்படுகிறது.

சிங்களக் குடியேற்றங்களுக்கு எதிராக வடக்கு மாகாணசபையினர் முல்லைத்தீவில் போராட்டம்

முல்லைத்தீவில் இடம்பெற்று வரும்  சிங்களக் குடியேற்றங்களுக்கு எதிர்ப்புத் தெரிவித்து, வடக்கு மாகாணசபை உறுப்பினர்கள் இன்று கண்டனப் போராட்டம் ஒன்றை முன்னெடுத்தனர்.

அம்பாந்தோட்டையில் ஜப்பானிய நாசகாரி

ஜப்பானிய கடற்படையின் நாசகாரி போர்க்கப்பலான ‘ஜேஎஸ் அகிபோனோ’, நல்லெண்ணப் பயணமாக அம்பாந்தோட்டைத் துறைமுகத்துக்கு வந்துள்ளது.

ஐரோப்பிய ஒன்றிய நாடாளுமன்றக் குழு சம்பந்தனுடன் சந்திப்பு

சிறிலங்காவுக்கு கண்காணிப்புப் பயணம் ஒன்றை மேற்கொண்டுள்ள ஐரோப்பிய ஒன்றிய நாடாளுமன்றக் குழு, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தனைச் சந்தித்துப் பேச்சு நடத்தியுள்ளது.

மட்டக்களப்பு மாநகர முதல்வரானார் சரவணபவன்

மட்டக்களப்பு மாநகர சபை முதல்வராக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் உறுப்பினர் தியாகராஜா சரவணபவன் தெரிவு செய்யப்பட்டுள்ளார்.

வாக்கெடுப்பு முடிந்ததும் விகாரைக்கு ஓடிய ரணில்

கூட்டு எதிரணியினரால் கொண்டு வரப்பட்ட நம்பிக்கையில்லா பிரேரணையைத் தோற்கடித்த பின்னர், சிறிலங்கா பிரதமர் ரணில் விக்கிரமசிங்க கங்காராமய விகாரைக்குச் சென்று வழிபாடு நடத்தினார்.