மேலும்

Archives

கொழும்பு நகரின் புதிய வரைபடம் வெளியானது

கொழும்பு நகரின் புதிய வரைபடம் நேற்று நிலஅளவைத் திணைக்களத்தினால் அதிகாரபூர்வமாக வெளியிடப்பட்டுள்ளது.

‘நாடு பின் நோக்கிச் செல்ல நேரிடும்’ – அமெரிக்க காங்கிரஸ் பிரதிநிதிகளிடம் எச்சரித்த சம்பந்தன்

சிங்கள தலைவர்கள்  சிலர் கடும்போக்காளர்களை திருப்திபடுத்துவதிலேயே ஆர்வமாக உள்ளனர். இந்த நிலை தொடர்ந்தால் நாடு மீண்டும் பின் நோக்கி செல்ல நேரிடும் என்று எச்சரித்துள்ளார் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன்.

சிறிலங்காவின் உள்நாட்டுப் பாதுகாப்பு, உலக அமைதிக்கு முக்கியம் – அமெரிக்க காங்கிரஸ் குழு

பிராந்தியப் பாதுகாப்பு மற்றும் உலக அமைதிக்கு சிறிலங்காவின் உள்நாட்டுப் பாதுகாப்பு முக்கியமானது என்று, சிறிலங்கா வந்துள்ள அமெரிக்க நாடாளுமன்றமான காங்கிரசின் பிரதிநிதிக் குழு தெரிவித்துள்ளது.

சிறிலங்கா கடலோரக் காவல்படை அதிகாரிகளுக்கு ஜப்பானில் பயிற்சி

சிறிலங்கா கடலோரக் காவல்படைக்கு இரண்டு ரோந்துப் படகுகளை வழங்கியுள்ள ஜப்பான் அதில் பணியாற்றுவதற்கு எட்டு கடலோரக் காவல் படையினருக்குப் பயிற்சிகளை அளித்துள்ளது.

முதலீட்டு வாய்ப்புகளை ஊக்குவிப்பது குறித்து மலிக் சமரவிக்ரமவுடன் சீனத் தூதுவர் பேச்சு

முதலீட்டு வாய்ப்புகளை அதிகரிப்பது தொடர்பாக, சிறிலங்காவுக்கான சீனத் தூதுவர் செங் ஷியுவான், சிறிலங்காவின் அபிவிருத்தி மூலோபாயங்கள் மற்றும் அனைத்துலக வணிக அமைச்சர் மலிக் சமரவிக்ரமவைச் சந்தித்துப் பேச்சு நடத்தியுள்ளார்.

நினைவேந்தலில் பங்கேற்ற அதிகாரிகளை பணிநீக்கிய வங்கியைப் புறக்கணிக்கும் போராட்டம் தீவிரம்

முள்ளிவாய்க்கால் படுகொலைகளை கடந்த 18ஆம் நாள் நினைவு கூர்ந்த வங்கி அதிகாரிகள் இருவர் பணி இடைநிறுத்தம் செய்யப்பட்டதைக் கண்டித்து, குறித்த வங்கியில் கணக்குகளை வைத்திருந்த வாடிக்கையாளர்கள் பலரும், தமது கணக்குகளை மூடி எதிர்ப்புத் தெரிவித்து வருகின்றனர்.

சிறிலங்காவின் பல பகுதிகள் வெள்ள ஆபத்தில் – 12 மாவட்டங்களில் 23 ஆயிரம் பேர் பாதிப்பு

சிறிலங்காவில் கடந்த சில நாட்களாக கொட்டி வரும் மழை மற்றும் சூறைக்காற்று, மின்னல் போன்றவற்றினால், 6 பேர் பலியாகினர். அத்துடன் 12 மாவட்டங்களில் 1024 பேர் இடம்பெயர்ந்துள்ளனர். மேலும் 22,000 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

சீனாவிடம் ஆறு புத்தம் புதிய விமானங்களை வாங்கியது சிறிலங்கா விமானப்படை

சீனாவிடம் இருந்து கொள்வனவு செய்யப்பட்ட ஆறு புத்தம் புதிய PT-6 ரக பயிற்சி விமானங்கள் சிறிலங்கா விமானப்படையில் இணைத்துக் கொள்ளப்படவுள்ளன.

ஈழக்கனவு நிறைவேற விடமாட்டேன்- சிறிலங்கா அதிபர் சூளுரை

சிறிலங்கா இராணுவம் போர்க்குற்றங்களில் ஈடுபடவில்லை என்றும், விடுதலைப் புலிகளுடன் தொடர்புடையவர்களே அத்தகைய குற்றச்சாட்டுகளைக் கூறுவதாகவும் சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.

புலனாய்வுப் பிரிவை வலுப்படுத்த சிறிலங்காவின் உதவியைக் கோரும் இந்தியா

புலனாய்வுப் பிரிவுகளை வலுப்படுத்துவதற்கு சிறிலங்காவின் உதவியை எதிர்பார்ப்பதாக இந்திய இராணுவத் தளபதி ஜெனரல் பிபின் ராவத் தெரிவித்துள்ளார்.