மேலும்

Tag Archives: மங்கள சமரவீர

சிறிலங்கா குறித்த அறிக்கையைப் பார்த்து திகைத்தாராம் ஜோன் கெரி

சிறிலங்காவில் 100 நாள் திட்டத்தின் கீழ் நிறைவேற்றப்பட்ட பணிகள் குறித்த அறிக்கையைப் பார்த்து அமெரிக்க இராஜாங்கச் செயலர் ஜோன் கெரி திகைத்துப் போனதாகத் தெரிவித்துள்ளார் சிறிலங்காவின் அமைச்சரவைப் பேச்சாளராக ராஜித சேனாரத்ன.

விசாரணைக்குழுவை அனுப்புவது குறித்து உக்ரேனியத் தூதுவருடன் மங்கள பேச்சு

சிறிலங்கா வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீரவை, புதுடெல்லியில் உள்ள உக்ரேனியத் தூதுவர் ஒலெக்சான்டர் செவ்சென்கோ நேற்று கொழும்பில் சந்தித்துப் பேச்சு நடத்தினார்.

அமெரிக்கா அதிபர் ஒபாமாவும் சிறிலங்கா வருவதற்கு வாய்ப்பு –வொசிங்டனில் இருந்து தகவல்

அமெரிக்க இராஜாங்கச் செயலர் ஜோன் கெரி சிறிலங்காவுக்கு விரைவில் பயணம் மேற்கொள்ளவுள்ள நிலையில், அமெரிக்க அதிபர் பராக் ஒபாமாவும் கூட, சிறிலங்காவுக்குப் பயணம் மேற்கொள்ளும் வாய்ப்புகள் இருப்பதாக, வொசிங்டனில் உள்ள சிறிலங்கா தூதரகம், சிறிலங்கா வெளிவிவகார அமைச்சுக்குத் தகவல் அனுப்பியுள்ளது.

சீனாவுடன் சுமுக உறவை விரும்புகிறார் சிறிலங்கா அதிபர் – ஏஎவ்பி ஆய்வு

இவ்வாரம் சீனாவுக்கான பயணத்தை மேற்கொள்ளவுள்ள சிறிலங்காவின் புதிய அதிபர் சீனத் தலைமையைச் சந்தித்து சிறிலங்காவில் தடைப்பட்ட சீனாவின் திட்டங்கள் தொடர்பில் சுமூகமான பேச்சுக்களை நடத்தவுள்ளார்.

ஐ.நா மனித உரிமைகள் ஆணையாளர் ஜூனில் சிறிலங்கா வருகிறார்

சிறிலங்கா அரசாங்கத்தின் அழைப்பையேற்று, ஐ.நா மனித உரிமைகள் ஆணையாளர் செயிட் ராட் அல் ஹுசேன் வரும் ஜூன் மாதம் சிறிலங்காவுக்குப் பயணம் மேற்கொள்ளவுள்ளார். சிறிலங்கா நாடாளுமன்றத்தில் வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீர நேற்று இந்த தகவலை வெளியிட்டுள்ளார்.

புலம்பெயர் தமிழர்கள், அமைப்புகள் மீதான தடை மீளாய்வு – மங்கள சமரவீர அறிவிப்பு

விடுதலைப் புலிகளுடன் தொடர்பு உள்ளது என்பதற்கான உறுதியான ஆதாரங்கள் இல்லாத- சில புலம்பெயர் அமைப்புகள் மற்றும் தனிநபர்கள் மீது விதிக்கப்பட்டுள்ள தடை குறித்து மீளாய்வு செய்யப் போவதாக சிறிலங்கா அரசாங்கம் தெரிவித்துள்ளது.

தேசிய நல்லிணக்க முயற்சிக்கு பிரித்தானிய பிரதமரிடம் உதவி கோரவுள்ளார் மைத்திரி

போருக்குப் பிந்திய தேசிய நல்லிணக்க முயற்சிகளுக்கு, பிரித்தானியாவில்  உள்ள செல்வாக்குப் பெற்ற புலம்பெயர் தமிழ் அமைப்புகளை ஆதரவை திரட்டுவதற்கு, சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேனவும் அவரது அரசாங்கமும், பிரித்தானியாவின் உதவியைக் கோரவுள்ளதாக கொழும்பு ஆங்கில நாளிதழ் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.

நம்பிக்கையைக் காப்பாற்ற வேண்டும் சிறிலங்கா – சீனா கூறுகிறது

சீன- சிறிலங்கா நட்பின் ஒட்டுமொத்த நலன்களுக்காக, சிறிலங்காவில் முதலீடு செய்துள்ள,  சீன நிறுவனங்களின் நம்பிக்கையை காப்பாற்ற சிறிலங்கா அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று, சீனா தெரிவித்துள்ளது.

ஐ.நா மனித உரிமை ஆணையாளருடன் மங்கள சமரவீர பேச்சு

ஐ.நா மனித உரிமை ஆணையாளர் செயிட் ராட் அல் ஹுசேனை, சிறிலங்கா வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீர இன்று ஜெனிவாவில் சந்தித்துப் பேச்சு நடத்தினார்.

ஐ.நா விசாரணை அறிக்கையை உள்ளக விசாரணைக்கு பயன்படுத்துவோம் – ஜெனிவாவில் மங்கள

போரின்போது நடந்த பாரிய மனித உரிமை மீறல்கள் தொடர்பான ஐ.நா மனித உரிமைகள் ஆணையரின் விசாரணை அறிக்கையின் பரிந்துரைகளை, சிறிலங்கா அரசு உருவாக்கவிருக்கும் உள்ளக விசாரணை மற்றும் நீதிக்கட்டமைப்பு பயன்படுத்தும் என்று சிறிலங்கா வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீர தெரிவித்துள்ளார்.