மேலும்

Tag Archives: பாலச்சந்திரன்

பாலச்சந்திரனும், இசைப்பிரியாவும் ஆயுதப் போராளிகள் தான் – என்கிறார் மகிந்த

விடுதலைப் புலிகளின் தலைவர்  வே.பிரபாகரனின் இளைய மகன் பாலச்சந்திரனோ, இசைப்பிரியாவோ அப்பாவிகள் அல்ல, ஆயுதம் தாங்கிய போராளிகள் என்றும், அவர்களை இராணுவத்தினர் சுட்டதற்கான ஆதாரங்கள் ஏதும் கிடையாது என்றும் தெரிவித்துள்ளார் சிறிலங்காவின் முன்னாள் அதிபரும், எதிர்க்கட்சித் தலைவருமான மகிந்த ராஜபக்ச.

புதிய அரசியலமைப்பை ஆதரிப்போர் கொல்லப்பட வேண்டும் – கமல் குணரத்னவின் ‘கொலைவெறி’

புதிய அரசியலமைப்பை உருவாக்குவதற்கு ஆதரவாக இருப்போர் துரோகிகள் என்றும், அவர்கள் கொல்லப்பட வேண்டியவர்கள் என்றும் தெரிவித்துள்ளார் சிறிலங்காவின் போர்க்குற்றவாளிகளில் ஒருவரான, மேஜர் ஜெனரல் கமல் குணரத்ன.

வெள்ளைக்கொடி, பாலச்சந்திரன், இசைப்பிரியா படுகொலைகள் – விசாரணை அறிக்கை பெப்ரவரியில்

வெள்ளைக் கொடி விவகாரம், நீதிக்குப் புறம்பான படுகொலைகள், பாலச்சந்திரன் படுகொலை, இசைப்பிரியா படுகொலை உள்ளிட்ட சம்பவங்கள் தொடர்பாக, ஓய்வு பெற்ற காவல்துறை அதிகாரிகளைக் கொண்ட குழு விசாரணை நடத்தி வருவதாக, காணாமற்போனோர் குறித்து விசாரிக்கும் அதிபர் ஆணைக்குழுவின் தலைவர் மக்ஸ்வெல் பரணகம தெரிவித்துள்ளார்.

பிரபாகரன் தற்கொலை செய்து கொள்ளவில்லை என்கிறார் சரத் பொன்சேகா

விடுதலைப் புலிகளின் தலைவர் வே.பிரபாகரன் தன்னைத் தானே சுட்டுத் தற்கொலை செய்து கொள்ளவில்லை என்றும், மோட்டார் குண்டு அல்லது ஷெல் ஒன்றின் சிதறல் தாக்கியே மரணமாகியிருக்கலாம் என்றும் தெரிவித்துள்ளார் சிறிலங்காவின் முன்னாள் இராணுவத் தளபதி பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா.

பாலச்சந்திரன் சண்டையிலேயே உயிரிழந்திருக்க வேண்டும் என்கிறார் சரத் பொன்சேகா

வன்னியில் போரின் இறுதிக்கட்டத்தில் 40 ஆயிரம் பொதுமக்கள் சிறிலங்காப் படையினரால் படுகொலை செய்யப்பட்டதான குற்றச்சாட்டையும், பாலச்சந்திரன் பிரபாகரன் படுகொலைக் குற்றச்சாட்டையும், சிறிலங்காவின் முன்னாள் இராணுவத் தளபதி பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா நிராகரித்துள்ளார்.

பிரித்தானிய நாடாளுமன்ற வளாகத்தில் போர்க்குற்ற ஆவணப்படம் – மைத்திரிக்கு நெருக்கடி

சிறிலங்காவின் போர்க்குற்றங்களை வெளிப்படுத்தும், ‘போர் தவிர்ப்பு வலயம்: சிறிலங்காவின் கொலைக்களங்கள்’ என்ற, சனல் 4 தொலைக்காட்சியில் வெளியிட்ட ஆவணப்படத்தின் சிங்கள மொழியாக்க காணொளி இன்று பிரித்தானிய நாடாளுமன்ற வளாகத்தில் திரையிடப்படவுள்ளது.