மேலும்

Tag Archives: நீதிபதிகள்

தன்னிச்சையான தடுத்து வைப்புகள் முடிவுக்குக் கொண்டு வரப்பட வேண்டும் – ஐ.நா நிபுணர் குழு

சிறிலங்காவில் தன்னிச்சையான தடுத்துவைப்புகள் முடிவுக்குக் கொண்டு வரப்பட வேண்டும் என்று, ஐ.நா நிபுணர் குழு வலியுறுத்தியுள்ளது. தன்னிச்சையான தடுத்து வைப்புகள் குறித்த ஐ.நா பணிக்குழுவின் மூன்று உறுப்பினர்கள் சிறிலங்காவில் மேற்கொண்ட 12 நாட்கள் பயணத்தின் முடிவில் கொழும்பில் நேற்று வெளியிட்ட அறிக்கையிலேயே இவ்வாறு வலியுறுத்தப்பட்டுள்ளது.

வெளிநாட்டு நீதிபதிகளை அனுமதிக்க முடியாது – ஐ.நா, மேற்குலக தலைவர்களுக்கு மைத்திரி அறிவிப்பு

போர்க்குற்றங்கள் மற்றும் மனித உரிமை மீறல்கள் தொடர்பான குற்றச்சாட்டுகள் குறித்து விசாரணை செய்வதற்கான நீதிப் பொறிமுறையில், வெளிநாட்டு நீதிபதிகளை அனுமதிக்க முடியாது என்று, ஐ.நாவுக்கும், சக்திவாய்ந்த மேற்குலக நாடுகளின் தலைவர்களுக்கும் தாம் அறிவித்து விட்டதாக சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.

சிறிலங்கா போரின் மீது புதிய விசாரணைகளைத் தூண்டும் ஐ.நா அறிக்கை – பாகம் 2

முள்ளிவாய்க்காலில் நடந்தேறிய மீறல்களை நேரில் பார்த்த மக்களைப் பொறுத்தளவில் சிறிலங்காவின் அரசியல் மாற்றமானது சிறிதளவான நம்பிக்கையையே கொடுத்துள்ளது. போரில் பாதிக்கப்பட்ட தமிழ் மக்கள் தாம் சந்தித்த இழப்புக்களைச் செவிமடுப்பதற்கு நடுநிலையான ஒரு பொறிமுறையை மட்டுமே விரும்புகின்றனர்.

அனைத்துலக தலையீடு இல்லாத விசாரணையை ஏற்கோம் – அமெரிக்காவிடம் சுமந்திரன் தெரிவிப்பு

சிறிலங்காவில் இடம்பெற்ற மீறல்கள் குறித்த விசாரணை அனைத்துலக நீதிபதிகள், விசாரணையாளர்களை உள்ளடக்கியதாக மேற்கொள்ளப்பட வேண்டும் என்பதை அமெரிக்கத் தீர்மானம் உள்ளடக்கத் தவறினால், அதற்கு தாம் ஒத்துழைக்கமாட்டோம் என்று அமெரிக்காவிடம் தெரிவித்துள்ளது தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு.