5 படுகொலைகள் தொடர்பான வழக்குகளில் பிள்ளையான் சந்தேக நபராக அறிவிப்பு
2008-ஆம் ஆண்டு மட்டக்களப்பில் ஐந்து பேர் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவங்கள் தொடர்பான வழக்கில், சிறிலங்காவின் முன்னாள் இராஜாங்க அமைச்சர் சிவனேசதுரை சந்திரகாந்தன் (பிள்ளையன்) மூன்றாவது சந்தேக நபராகப் பெயரிடப்பட்டுள்ளதாக குற்றப் புலனாய்வுப் பிரிவு, மட்டக்களப்பு நீதிவான் நீதிமன்றத்தில் அறிக்கை சமர்ப்பித்துள்ளது.
