வன்னி, மட்டக்களப்பில் முஸ்லிம் காங்கிரஸ் தனித்துப் போட்டி – ஏனைய இடங்களில் ஐதேகவுடன் கூட்டு
வரும் நாடாளுமன்றத் தேர்தலில் சிறிலங்கா முஸ்லிம் காங்கிரஸ் வன்னி, மட்டக்களப்பு தவிர்ந்த ஏனைய மாவட்டங்களில் ஐக்கிய தேசியக் கட்சியுடன் இணைந்து போட்டியிடவுள்ளது.
வரும் நாடாளுமன்றத் தேர்தலில் சிறிலங்கா முஸ்லிம் காங்கிரஸ் வன்னி, மட்டக்களப்பு தவிர்ந்த ஏனைய மாவட்டங்களில் ஐக்கிய தேசியக் கட்சியுடன் இணைந்து போட்டியிடவுள்ளது.
திருகோணமலை மாவட்டத்தில் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் தலைமையில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு நாடாளுமன்றத் தேர்தலில் களமிறங்கியுள்ளது.
கொழும்பிலும், திருகோணமலையிலும் சிறிலங்கா கடற்படையினரின் இரகசியத் தடுப்பு முகாம்கள் இருந்தமைக்கான ஆதாரங்கள் கண்டறியப்பட்டுள்ளன.
திருகோணமலை மக்கெய்சர் மைதானத்தில் நேற்று மேற்கொள்ளப்பட்ட புதைகுழி அகழ்வின் போது, ஆறு மனித எலும்புக்கூடுகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. இதையடுத்து. இதுவரை மீட்கப்பட்ட எலும்புக்கூடுகளின் எண்ணிக்கை 10ஆக அதிகரித்துள்ளது.
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பில் அங்கம் வகிக்கும், புளொட் சார்பில், வரும் நாடாளுமன்றத் தேர்தலில் யாழ்ப்பாண மாவட்டத்தில், அதன் தலைவர் தர்மலிங்கம் சித்தார்த்தன் போட்டியிடவுள்ளார்.
வரும் ஓகஸ்ட் மாதம் நடைபெறவுள்ள நாடாளுமன்றத் தேர்தலில் வடக்கு, கிழக்கில் 5 மாவட்டங்களிலும் உள்ள, 29 நாடாளுமன்ற ஆசனங்களுக்காக 44 வேட்பாளர்களை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு நிறுத்தவுள்ளது.
சிறிலங்காவில் வரும் ஓகஸ்ட் 17ஆம் நாள் நடக்கவுள்ள நாடாளுமன்றத் தேர்தலுக்கான வேட்புமனுக்கள் இன்று தொடக்கம் தேர்தல்கள் திணைக்களத்தினால் ஏற்றுக் கொள்ளப்படவுள்ளன.
நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிடும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பில் இடம்பெற்றுள்ள கட்சிகளுக்கு இடையிலான ஆசனப் பங்கீடு குறித்து, நாளை வவுனியாவில் நடைபெறவுள்ள உயர்மட்டக் கூட்டத்தில் இறுதி முடிவு எடுக்கப்படவுள்ளது.
முப்பதாண்டுகால தீவிரவாதத்தை தோற்கடிப்பதில், முக்கிய பங்காற்றிய சிறிலங்கா கடற்படைக்கு, நாட்டின் தேசிய பாதுகாப்பை உறுதிப்படுத்துவதில் முக்கிய பங்கு இருப்பதாக, சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.
வரும் ஓகஸ்ட் மாதம் நடைபெறவுள்ள நாடாளுமன்றத் தேர்தலில், திருகோணமலை மாவட்டத்தில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் சார்பில் போட்டியிடுவதற்கு, விடுதலைப் புலிகளின் முன்னாள் முக்கிய போராளியான ரூபன் இலங்கைத் தமிழரசுக் கட்சியிடம் விண்ணப்பித்துள்ளார்.