நல்லிணக்கத்தை நோக்கி அர்த்தமுள்ள முன்னேற்றங்கள் ஏற்பட வேண்டும்- றொபேர்ட் ஓ. பிளாக்
ஜனநாயகக் கட்சியின் கட்டுப்பாட்டில் உள்ள அமெரிக்க நாடாளுமன்றம், சிறிலங்காவின் ஊழல் எதிர்ப்பு முயற்சிகளுடன் சேர்த்து, மனித உரிமைகள் பதிவுகள் குறித்தும் கூடுதல் கவனம் செலுத்தக்கூடும் என்று சிறிலங்காவுக்கான முன்னாள் அமெரிக்க தூதுவர் றொபேர்ட் ஓ. பிளாக் எச்சரித்துள்ளார்.
