உதவிப் பொருட்களுடன் கொழும்பு வந்தது சீன விமானம்
சிறிலங்காவில் வெள்ளம் மற்றும் நிலச்சரிவினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கான 2.2 மில்லியன் டொலர் பெறுமதியான உதவிப் பொருட்களை ஏற்றிக் கொண்டு சீன விமானம் ஒன்று நேற்று பிற்பகல் கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்தது.




