மேலும்

Tag Archives: சிறிலங்கா

நீர்மூழ்கி வருகை குறித்து முன்கூட்டியே தகவல் தருவதில்லை – சிறிலங்கா மீது இந்தியா விசனம்

சீன நீர்மூழ்கிகளின் கொழும்பு வருகை பற்றிய தகவல்களை சிறிலங்கா முன்கூட்டியே தெரியப்படுத்துவதில்லை என்று இந்தியா விசனம் தெரிவித்துள்ளது.

ஐ.நா விசாரணைகள் குறித்து வெளிநாட்டுத் தூதுவர்களை அழைத்து அதிருப்தி வெளியிட்டார் பீரிஸ்

கொழும்பிலுள்ள வெளிநாட்டுத் தூதுவர்களிடம், ஐ.நா மனித உரிமை ஆணையாளர் பணியகத்தின் விசாரணைகள் தொடர்பாக, சிறிலங்கா அரசாங்கம் தனது அதிருப்தியை வெளியிட்டுள்ளது.

இந்திய தேசிய பாதுகாப்பு ஆலோசகர் சிறிலங்காவுக்கு வருகிறார்

கடல்சார் பாதுகாப்புக் கருத்தரங்கில் கலந்து கொள்வதற்காக, இந்தியாவின் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் டோவல் அடுத்த மாத துவக்கத்தில் சிறிலங்காவுக்குப் பயணம் மேற்கொள்ளவுள்ளார்.

சிறிலங்காவுடன் இறுகிவரும் சீனாவின் உறவு : இந்தியாவுக்கான சவால்

சீனா தனது அயல்நாடுகளின் விவகாரங்களில் தலையீடு செய்வதை இந்தியா எதிர்க்கவில்லை. ஆனால் சீனாவானது, எமது அயல்நாடுகளின் விவகாரங்களில் தலையீடு செய்வதானது இந்தியாவிற்கு அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.

போருக்கு பின்னான சிறிலங்காவில் உச்சம் பெற்றிருக்கும் இனவாதம் மற்றும் பாலியல் கருத்தியல்கள்

போருக்குப் பின்னான சிறிலங்காவில் இனவாதம்-பாலியல் போன்றன பெண்கள் மற்றும் குழந்தைப் பேறு போன்றவற்றுடன் மட்டும் தொடர்புபட்டிருக்கவில்லை. இதன்மூலம் இன-மத மற்றும் வர்க்க எல்லைகளுக்கிடையில் தொடர்புகளைப் பேணி ஒற்றுமையை வலுப்படுத்துவதற்கும் இனவாதம்-பாலியல் தொடர்பான கருத்துக்கள் தடையாக உள்ளன.

நாடாளுமன்றத்துக்கு விளக்கமளிக்குமாறு கோத்தாவுக்கு சபாநாயகர் உத்தரவு

இந்தியப் பாதுகாப்பு அமைச்சர் வெளியிட்ட தகவல் தொடர்பாக விளக்கமளிக்குமாறு, சிறிலங்கா பாதுகாப்புச் செயலர் கோத்தாபய ராஜபக்சவுக்கு, நாடாளுமன்ற சபாநாயகர் சமல் ராஜபக்ச உத்தரவிட்டுள்ளார்.

மேல்முறையீடு செய்தது இந்தியா – மீனவர்களுக்கு நீதி கிடைக்கும் என்றும் நம்பிக்கை

ஐந்து தமிழ்நாட்டு மீனவர்களுக்கு  கொழும்பு மேல் நீதிமன்றம் விதித்த மரணதண்டனைத் தீர்ப்புக்கு எதிராக, கொழும்பிலுள்ள இந்தியத் தூதரகம், சிறிலங்கா உயர்நீதிமன்றத்தில் இன்று மேல்முறையீட்டு மனுவைத் தாக்கல் செய்துள்ளது.

செழுமைமிக்க நாடுகளின் பட்டியலில் சிறிலங்காவுக்கு பின்னடைவு

உலகளவில் செழுமைமிக்க நாடுகளின் பட்டியலில், சிறிலங்கா இந்த ஆண்டும் பின்னடைவைச் சந்தித்துள்ளது. Legatum Institute என்ற அமைப்பினால், ஆண்டு தோறும் வெளியிடப்பட்டு வரும், Legatum Prosperity Index 2014 வெளியிடப்பட்டுள்ளது.

சிரியாவுக்குச் செல்ல முயன்ற மாலைதீவு ஜிகாதிகள் சிறிலங்காவில் கைது

சிரியாவில் ஐஎஸ்ஐஎஸ் தீவிரவாதிகளுடன் இணைந்து போரிடுவதற்குச் செல்வதற்காக சிறிலங்கா வந்த மூன்று மாலைதீவு பிரஜைகள், கைது செய்யப்பட்டு நாடு கடத்தப்பட்டுள்ளனர்.

அதிபர் தேர்தல் குறித்த வர்த்தமானி அறிவிப்பை வரும் 19ம் நாள் வெளியிடுகிறார் மகிந்த

அதிபர் தேர்தல் தொடர்பான அறிவிப்பை சிறிலங்கா அதிபர் மகிந்த ராஜபக்ச வரும் 19ம் நாள் வர்த்தமானி மூலம் வெளியிடுவார் என்று சிறிலங்கா அமைச்சர் லக்ஸ்மன் யாப்பா அபேவர்த்தன தெரிவித்துள்ளார்.