மேலும்

Tag Archives: சிறிலங்கா

வொசிங்டன் பொங்கல் விழாவில் நிஷா பிஸ்வால் – சிறிலங்கா தூதுவருடன் முக்கிய பேச்சு

வொசிங்டனில் உள்ள அமெரிக்காவுக்கான சிறிலங்கா தூதரகத்தில் இன்று மாலை நடைபெறவுள்ள தைப்பொங்கல் விழாவில், அமெரிக்க இராஜாங்கத் திணைக்களத்தின் உதவிச் செயலர் நிஷா தேசாய் பிஸ்வால் கலந்து கொள்ளவுள்ளார்.

வடக்கு மாகாண ஆளுனராக பாலிஹக்கார நியமனம்

சிறிலங்காவின் முக்கிய இராஜதந்திரிகளில் ஒருவரான எச்.எம்.ஜி.எஸ்.பாலிஹக்கார, வடக்கு மாகாண ஆளுனராக அதிபர் மைத்திரிபால சிறிசேனவினால் நியமிக்கப்பட்டுள்ளார்.

பாப்பரசர் வருகையின் போது சிறிலங்காவில் நிகழ்ந்த 3 ஆட்சி மாற்றங்கள்

பாப்பரசர்கள் பயணம் மேற்கொண்ட தருணங்களில், சிறிலங்காவில் மூன்றுமுறை ஆட்சிமாற்றங்கள் ஏற்பட்டுள்ளது ஒரு விநோதமான விடயம் என்று ஊடகங்கள் விபரித்துள்ளன.

சிறிலங்காவில் நல்லிணக்கம், மனித உரிமைகளை வலியுறுத்துகிறார் பாப்பரசர்

சிறிலங்காவில் மனித உரிமைகளுக்கு மதிப்பளிக்கும் நிலையையும், உண்மையான நல்லிணக்கத்தையும் தாம் எதிர்பார்ப்பதாக, பாப்பரசர் முதலாவது பிரான்சிஸ் தெரிவித்துள்ளார்.

மைத்திரிக்கு சீனாவும் கை நீட்டுகிறது

சிறிலங்காவின் புதிய அதிபராகத் தெரிவு செய்யப்பட்டுள்ள மைத்திரிபால சிறிசேனவுக்கு சீனா வாழ்த்துத் தெரிவித்துள்ளதுடன், புதிய அரசாங்கம் சீனாவுடன் நட்புரீதியான கொள்கையைக் கடைப்பிடிக்கும் என்று நம்பிக்கை தெரிவித்துள்ளது.

வாக்களிப்பு தெற்கில் படுவேகம்; வடக்கு, கிழக்கில் மந்தம்

சிறிலங்காவில் நடந்து வரும் அதிபர் தேர்தலில் நண்பகல் வரை நாட்டின் பல இடங்களில் வாக்களிப்பு வீதம் 50 வீதத்தை தாண்டி விட்டதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.

தோல்விக்குப் பின் மகிந்தவை வெளியேற்ற சந்திரிகா வைத்துள்ள இரகசியத் திட்டம்

அதிபர் தேர்தலில், தோல்விடைந்த பின்னர், பதவியை விட்டு விலக மகிந்த ராஜபக்ச முன்வராது போனால், அவரை வெளியேற்றுவதற்கு எதிரணியிடம் ஒரு இரகசியத் திட்டம் இருப்பதாக, முன்னாள் அதிபர் சந்திரிகா குமாரதுங்க தெரிவித்துள்ளார்.

எதிரணி வெற்றி பெற்றால் சிறிலங்காவுக்கு ஆபத்து – அலறுகிறார் பீரிஸ்

வரும் 8ம் நாள் நடக்கவுள்ள அதிபர் தேர்தலில் எதிரணியினர் வெற்றி பெற்றால், சிறிலங்கா மிகப்பெரிய அச்சுறுத்தலை எதிர்கொள்ள நேரிடும் என்று சிறிலங்கா வெளிவிவகார அமைச்சர் ஜி.எல்.பீரிஸ் தெரிவித்துள்ளார்.

மர்மப் பயணம் மேற்கொள்ளும் சீன மீன்பிடிக் கப்பல்களுக்கு தடைவிதித்தது சிறிலங்கா

சிறிலங்கா கொடியுடன், அனைத்துலக கடற்பரப்பில் மீன்பிடியில் ஈடுபட்டு வந்த, சீன மற்றும் ஜப்பானிய மீன்பிடிக் கப்பல்களுக்கு தற்காலிக தடை விதிக்கப்பட்டுள்ளது.

பான் கீ மூன் மீது பாய்கிறது சிறிலங்கா அரசாங்கம்

அமைதியானதும், நம்பகமானதுமான தேர்தலை நடத்த வலியுறுத்திய ஐ.நா பொதுச்செயலர் பான் கீ மூனை சிறிலங்காவின் ஆளும் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி கடுமையாக கண்டித்துள்ளது.