மேலும்

Tag Archives: சிறிலங்கா அதிபர்

வெசாக் கொண்டாட்டங்களில் நிஷா பிஸ்வால் – இன்று கொழும்பில் இருந்து புறப்பட்டார்

அமெரிக்காவின் தெற்கு மத்திய ஆசியப் பிராந்தியத்துக்கான உதவி இராஜாங்கச் செயலர் நிஷா பிஸ்வால், சிறிலங்காவுக்கான பயணத்தை முடித்துக் கொண்டு இன்று கொழும்பில் இருந்து புறப்பட்டுச் சென்றுள்ளார்.

புதனன்று மகிந்த – மைத்திரி சந்திப்புக்கு ஏற்பாடு

சிறிலங்காவின் முன்னாள் ஆட்சியாளர் மகிந்த ராஜபக்சவுக்கும், சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேனவுக்கும் இடையிலான சந்திப்பு வரும் புதன்கிழமை அல்லது வியாழக்கிழமை சபாநாயகர் சமல் ராஜபக்சவின் இல்லத்தில் நடைபெறவுள்ளது.

ஜோன் கெரியிடம் மைத்திரி முன்வைத்த மூன்று கோரிக்கைகள்

ஊழல், மோசடி மற்றும் நிதி மோசடிகள் தொடர்பான விசாரணைகளை மேற்கொள்வதற்கு, சிறிலங்கா அதிகாரிகளுக்கு பயிற்சி வசதிகளை அளிக்க அமெரிக்கா முன்வந்துள்ளது.

தமிழ்மக்களின் கோரிக்கை மீது கவனம் செலுத்த வேண்டும் – ‘இந்தியன் எக்ஸ்பிரஸ்’ ஆசிரியர் கருத்து

சிறிலங்கா அதிபர் தனது முதல் 100 நாள் ஆட்சியையும் பூர்த்தியாக்கியுள்ளார். தனக்கு முன்னர் நாட்டை ஆட்சி செய்த மகிந்த ராஜபக்சவை விட தனது நிர்வாகத்தை வேறுபடுத்திக் காண்பிப்பதற்காகவே மைத்திரிபால சிறிசேன 100 நாள் செயற்றிட்டத்தை அறிமுகப்படுத்தியிருந்தார்.

போர் தவிர்ப்பு வலயம் ஆவணப்படம் சிறிலங்கா அதிபருக்கு கையளிப்பு

சிறிலங்காவில் நடந்த போர்க்குற்றங்களை வெளிப்படுத்தும், போர் தவிர்ப்பு வலயம், ஆவணப்படத்தின் சிங்கள மொழியாக்கப் பிரதியொன்று, சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேனவுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக, அந்த ஆவணப்படத்தை தயாரித்த கலும் மக்ரே தெரிவித்துள்ளார்.

19வது திருத்தத்தை நிறைவேற்றிய சிறிலங்காவுக்கு பிரித்தானியா பாராட்டு

19வது அரசியலமைப்புத் திருத்தத்தை நாடாளுமன்றத்தில் நிறைவேற்றியதற்கு, சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேனவுக்கு, பிரித்தானிய அரசாங்கத்தின் சார்பில், சிறிலங்காவுக்கான புதிய பிரித்தானியத் தூதுவர், ஜேம்ஸ் டௌரிஸ் வாழ்த்துத் தெரிவித்துள்ளார்.

’19’ஐ நிறைவேற்ற நாடாளுமன்றதில் நேற்று முழுவதும் மைத்திரி நடத்திய போராட்டம்

சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன, 19வது திருத்தச்சட்டத்தை நிறைவேற்றுவதற்காக நேற்று முழுநாளும் நாடாளுமன்றத்திலேயே தங்கியிருந்தார்.

மைத்திரி வாக்குறுதி – உண்ணாவிரதப் போராட்டத்தைக் கைவிட்டார் சோபித தேரர்

19வது அரசியலமைப்புத் திருத்தத்தை நிறைவேற்ற வலியுறுத்தி, இன்று ஆரம்பித்த உண்ணாவிரதப் போராட்டத்தை, சமூக நீதிக்கான தேசிய இயக்கத்தின் அமைப்பாளருமான கோட்டே நாகவிகாரையின் விகாராதிபதி வண.மாதுளுவாவே சோபித தேரர், கைவிட்டுள்ளார்.

மைத்திரியைச் சந்திக்க மறுத்த மகிந்த – பின்னணி அம்பலம்

ராஜபக்ச குடும்பத்தினருக்கு எதிராகவும், தனது ஆட்சியின் போது, முக்கிய பங்கு வகித்த அதிகாரிகளுக்கு எதிராகவும், அரசாங்கம் நடவடிக்கை எடுத்து வருவதாலேயே, சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேனவுடன் இன்று நடத்தவிருந்த சந்திப்பை மகிந்த ராஜபக்ச ரத்துச் செய்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

சிறிலங்கா அதிபர் நாளை நாட்டு மக்களுக்கு முக்கிய உரை – நாடாளுமன்றம் கலைக்கப்படுமா?

சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன நாளை இரவு 9 மணியளவில் நாட்டு மக்களுக்கு இலத்திரனியல் ஊடகங்களின் மூலம்  மிக முக்கியமான உரை ஒன்றை நிகழ்த்தவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.