மேலும்

Tag Archives: கோத்தாபய ராஜபக்ச

உச்சநீதிமன்ற வாசற்படியில் தடுக்கி விழுந்த மகிந்த

சிறிலங்காவின் முன்னாள் ஆட்சியாளர் மகிந்த ராஜபக்ச உச்சநீதிமன்ற வாசற்படியில், தடுக்கி விழுந்த நிலையில், அருகில் இருந்து உதவியாளர்கள் தாங்கிப் பிடித்ததால், காயங்களின்றித் தப்பினார்.

அரசியல் பிரவேசம் குறித்து முடிவெடுக்கவில்லை – கோத்தா

அரசியலுக்கு வருவது தொடர்பாக தாம் எந்த முடிவையும் எடுக்கவில்லை என்று சிறிலங்காவின் முன்னாள் பாதுகாப்புச் செயலர் கோத்தாபய ராஜபக்ச தெரிவித்துள்ளார்.

பரபரப்பான சூழலில் இன்று நாடு திரும்புகிறார் கோத்தா – கைது செய்யப்படுவாரா?

சிறிலங்காவில் நேற்று முன்தினம் நடந்த உள்ளூராட்சித் தேர்தலில் மகிந்த ராஜபக்சவின் சிறிலங்கா பொதுஜன முன்னணி எதிர்பாராத வெற்றியைப் பெற்றுள்ள சூழலில், அமெரிக்கா சென்றிருந்த முன்னாள் பாதுகாப்புச் செயலர் கோத்தாபய ராஜபக்ச இன்று நாடு திரும்பவுள்ளார்.

கோத்தாவைச் சந்திக்கச் சென்ற போது டுபாயில் சிக்கினார் உதயங்க வீரதுங்க

டுபாயில் நேற்று கைது செய்யப்பட்ட ரஷ்யாவுக்கான சிறிலங்காவின் முன்னாள் தூதுவர் உதயங்க வீரதுங்கவை சிறிலங்காவுக்கு நாடு கடத்தும் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படுவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

தேர்தலுக்குப் பின் நாடு திரும்பும் கோத்தாவைக் கைது செய்ய ஏற்பாடு

உள்ளூராட்சித் தேர்தலுக்குப் பின்னர் நாடு திரும்பவுள்ள, சிறிலங்காவின் முன்னாள் பாதுகாப்புச் செயலர் கோத்தாபய ராஜபக்சவை கைது செய்வதற்கான ஏற்பாடுகள் அனைத்தும் பூர்த்தி செய்யப்பட்டுள்ளதாக, சிறிலங்காவின் அமைச்சர் ராஜித சேனாரத்ன தெரிவித்துள்ளார்.

கோத்தாவின் அமெரிக்க குடியுரிமை – விசாரணை நடத்த சிறிலங்கா அரசு முடிவு

சிறிலங்காவின் முன்னாள் பாதுகாப்புச் செயலர் கோத்தாபய ராஜபக்ச அமெரிக்கக் குடியுரிமை கொண்டவரா இல்லையா என்பதைக் கண்டறிய விசாரணைகள் நடத்தப்படும் என்று சிறிலங்காவின் உள்நாட்டு விவகாரங்களுக்கான அமைச்சர் எஸ்.பி.நாவின்ன தெரிவித்துள்ளார்.

கோத்தாவின் திடீர் முடிவினால் ஆண்டுக்கு 5 பில்லியன் ரூபா இழப்பு – விசாரணைக்கு நடவடிக்கை?

பாதுகாப்புத் தலைமையகங்களை கொழும்பு நகரில் இருந்து அகற்றும்- முன்னைய அரசாங்கத்தின் திட்டமிடப்படாத – திடீர் முடிவினால் சிறிலங்கா பாதுகாப்புப் படைகள் வாடகைக்குப் பெற்றுள்ள 15 கட்டடங்களுக்காக ஆண்டுக்கு 5 பில்லியன் ரூபாவை வாடகைக் கொடுப்பனவாக வழங்க வேண்டியுள்ளது.

கோத்தா கைதுக்கு இடைக்கால தடை உத்தரவு நீடிப்பு

சிறிலங்காவின் முன்னாள் பாதுகாப்புச் செயலர் கோத்தாபய ராஜபக்சவைக் கைது செய்வதற்கு விதித்திருந்த இடைக்காலத் தடை உத்தரவை மேல்முறையீட்டு நீதிமன்றம் டிசெம்பர் 15ஆம் நாள் வரை நீடித்துள்ளது.

கோத்தாவைக் கைது செய்ய இடைக்காலத் தடை

சிறிலங்காவின் முன்னாள் பாதுகாப்புச் செயலர் கோத்தாபய ராஜபக்சவை நிதிக் குற்றப் புலனாய்வுப் பிரிவினர் கைது செய்வதற்கு, மேல்முறையீட்டு நீதிமன்றம் இடைக்காலத் தடை உத்தரவு பிறப்பித்துள்ளது.

கைது பயத்தில் கோத்தா – தடுக்குமாறு நீதிமன்றில் அடைக்கலம்

தம்மைக் கைது செய்வதற்குத் தடை விதிக்கக் கோரி, சிறிலங்காவின் முன்னாள் பாதுகாப்புச் செயலர் கோத்தாபய ராஜபக்ச இன்று மேல்முறையீட்டு நீதிமன்றில் மனுவொன்றைத் தாக்கல் செய்துள்ளார்.