மேலும்

Tag Archives: கோத்தாபய ராஜபக்ச

கோத்தாவின் சீனப் பயணம் – மகிந்தவிடம் கேள்வி எழுப்பிய அமெரிக்க தூதுவர்

கோத்தாபய ராஜபக்சவின் அண்மைய சீனப் பயணம் தொடர்பாகவும், சிறிலங்காவின் முன்னாள் ஆட்சியாளர் மகிந்த ராஜபக்சவிடம் அமெரிக்கத் தூதுவர் அதுல் கெசாப் கேள்வி எழுப்பியதாக கொழும்பு ஆங்கில நாளிதழ் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.

கோத்தாவைச் சந்திக்கிறது 16 பேர் அணி

எதிர்க்கட்சி வரிசையில் அமர்ந்துள்ள சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் 16 பேர் அணி  வரும் புதன்கிழமை சிறிலங்காவின் முன்னாள் பாதுகாப்புச் செயலர் கோத்தாபய ராஜபக்சவைச் சந்தித்துப் பேச்சு நடத்தவுள்ளது.

கோத்தாவுக்காக கட்டுப்பணம் செலுத்த தயார் – சரத் பொன்சேகா

வரும் அதிபர் தேர்தலில் சிறிலங்காவின் முன்னாள் பாதுகாப்புச் செயலர் கோத்தாபய ராஜபக்ச போட்டியிட்டால், அவருக்காக கட்டுப்பணத்தை செலுத்த தான் தயார் என்று சிறிலங்கா அமைச்சர் பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா தெரிவித்துள்ளார்.

மில்லியன் கணக்கில் ஏன் செலவிடுகிறார் கோத்தா? – மங்கள கேள்வி

தம்மைக் கைது செய்வதைத் தடுப்பதற்கான நீதிமன்றத்தின் உத்தரவைப் பெறுவதற்காக கோத்தாபய ராஜபக்ச எதற்காக சட்டவாளர்களுக்கு மில்லியன் கணக்கான ரூபாவைச் செலவிடுகிறார் என்று சிறிலங்கா நிதி அமைச்சர் மங்கள சமரவீர கேள்வி எழுப்பியுள்ளார்.

அதிபர் வேட்பாளர் யார்? – அறிவிக்கத் தயங்கும் மகிந்த

அடுத்த அதிபர் தேர்தலில் வேட்பாளராகப் போட்டியிடுவது பற்றி, முன்னாள் பாதுகாப்புச் செயலர் கோத்தாபய ராஜபக்ச தம்முடன் இதுவரை கலந்துரையாடவில்லை என்று, சிறிலங்காவின் முன்னாள் ஆட்சியாளர் மகிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார்.

கோத்தாவே பொருத்தமான வேட்பாளர் – ஜோன் செனிவிரத்ன

சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் சார்பில், அதிபர் வேட்பாளராகப் போட்டியிடுவதற்கு, முன்னாள் பாதுகாப்புச் செயலர் கோத்தாபய ராஜபக்சவே பொருத்தமானவர் என்று, அந்தக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் ஜோன் செனிவிரத்ன தெரிவித்துள்ளார்.

“பிரபாகரன் புத்திசாலி அல்ல” – என்கிறார் கோத்தா

விடுதலைப் புலிகளுடனான பேச்சுக்களின் தனக்கு நம்பிக்கை இருக்கவில்லை என்றும், அது நேரத்தை வீணடிக்கும் செயல் என்று தான் கருதியதாகவும், சிறிலங்காவின் முன்னாள் பாதுகாப்புச் செயலர் கோத்தாபய ராஜபக்ச தெரிவித்துள்ளார்.

தேவைப்பட்டால் அரசியலில் நுழைவேன் – கோத்தா

தேவைப்பட்டால் அரசியலில் நுழைவது பற்றி முடிவு செய்வேன் என்று சிறிலங்காவின் முன்னாள் பாதுகாப்புச் செயலர் கோத்தாபய ராஜபக்ச தெரிவித்துள்ளார்.

அதிபர் தேர்தலில் போட்டியிடுவது குறித்து இன்னமும் கலந்துரையாடவில்லை – கோத்தா

2020 அதிபர் தேர்தலில் தான் போட்டியிடுவது தொடர்பாக, மகிந்த ராஜபக்சவுடனோ, பசில் ராஜபக்சவுடனோ இன்னமும் பேசவில்லை என்று சிறிலங்காவின் முன்னாள் பாதுகாப்புச் செயலர் கோத்தாபய ராஜபக்ச தெரிவித்துள்ளார்.

சீனத் தூதுவரைச் சந்தித்தார் கோத்தா

சிறிலங்காவுக்கான சீனாவின் புதிய தூதுவராகப் பதவியேற்றுள்ள செங் ஷுயுவானை, சிறிலங்காவின் முன்னாள் பாதுகாப்புச் செயலர் கோத்தாபய ராஜபக்ச சந்தித்துப் பேச்சு நடத்தியுள்ளார்.