ரவிராஜ் படுகொலை தொடர்பாக கருணாவிடம் விசாரணை
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர், நடராஜா ரவிராஜ் படுகொலை தொடர்பாக, சிறிலங்காவின் முன்னாள் பிரதி அமைச்சர் கருணா எனப்படும் விநாயகமூர்த்தி முரளிதரனிடம், விசாரணை நடத்தப்பட்டுள்ளது.
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர், நடராஜா ரவிராஜ் படுகொலை தொடர்பாக, சிறிலங்காவின் முன்னாள் பிரதி அமைச்சர் கருணா எனப்படும் விநாயகமூர்த்தி முரளிதரனிடம், விசாரணை நடத்தப்பட்டுள்ளது.
கிழக்கில் இருந்து தப்பி வந்த போது, கருணா எனப்படும், விநாயகமூர்த்தி முரளிதரன், ஒரு பயணப்பெட்டி நிறைய விடுதலைப் புலிகளின் முகாம்கள் அமைந்துள்ள வரைபடங்களை எடுத்து வந்ததாகத் தெரிவித்துள்ளார், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் அலிசாகிர் மௌலானா.
கிழக்கு மாகாண முன்னாள் முதலமைச்சர் சந்திரகாந்தன் (பிள்ளையான்) வரும் நாடாளுமன்றத் தேர்தலில் தோல்வியுற்றாலும், அவருக்கு தேசியப் பட்டியல் மூலம் நாடாளுமன்றம் செல்லும் வாய்ப்பு அளிக்கப்படும் என்று ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி உறுதியளித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
வரும் நாடாளுமன்றத் தேர்தலில் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியால் வெற்றி பெற முடியாது என்று தெரிவித்துள்ள முன்னாள் பிரதிஅமைச்சரும் சிறிலங்கா சுதந்திரக் கட்சியின மத்திய குழு உறுப்பினருமான கருணா எனப்படும் விநாயகமூர்த்தி முரளிதரன், ராஜபக்சக்களை கடுமையாக சாடியிருக்கிறார்.
தனக்குத் தேசியப்பட்டியலில் இடமளிப்பதாக வாக்குறுதி அளித்து ஏமாற்றிவிட்டதாக விசனமும், அதிர்ச்சியும் வெளியிட்டுள்ளார், முன்னாள் பிரதி அமைச்சர் கருணா எனப்படும் விநாயகமூர்த்தி முரளிதரன்.
சிறிலங்காவின் முன்னாள் பிரதி அமைச்சரும், சிறிலங்கா சுதந்திரக் கட்சியைச் சேர்ந்தவருமான கருணா எனப்படும் விநாயகமூர்த்தி முரளிதரனுக்கு ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி தேசியப்பட்டியலில் இடமளிக்க மறுத்துள்ளது.