முக்கிய மாநகர சபைகள், வடக்கின் 4 மாவட்டங்களில் தேர்தல் இல்லை
எல்லை நிர்ணயச் சர்ச்சை மற்றும் சட்ட ரீதியான தடைகளால், பிரதான மாநகர சபைகளுக்கோ, வடக்கின் நான்கு மாவட்டங்களுக்கோ தேர்தல் நடத்தப்படாது என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
எல்லை நிர்ணயச் சர்ச்சை மற்றும் சட்ட ரீதியான தடைகளால், பிரதான மாநகர சபைகளுக்கோ, வடக்கின் நான்கு மாவட்டங்களுக்கோ தேர்தல் நடத்தப்படாது என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
உள்ளூராட்சி சபைகளின் எல்லைகள் மற்றும் உறுப்பினர்களின் எண்ணிக்கையை வரையறை செய்து, உள்ளூராட்சி மாகாணசபைகள் அமைச்சரினால் வெளியிடப்பட்ட வர்த்தமானி அறிவித்தலுக்கு மேல்முறையீட்டு நீதிமன்றம் இடைக்காலத் தடை உத்தரவு பிறப்பித்துள்ளது.
சீன நாட்டவர்கள் 150 பேருக்கு கொழும்பில் உள்ள சுதந்திர சதுக்கத்தில், சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேனவின் தலைமையில் திருமணம் நடைபெறவுள்ளது. கொழும்பில் உள்ள சீனத் தூதரகம் இந்த நிகழ்வுக்கான ஏற்பாடுகளை மேற்கொண்டு வருகிறது.
காணாமல் ஆக்கப்படுதலில் இருந்து அனைவருக்கும் பாதுகாப்பு அளிக்கும் அனைத்துலக பிரகடனம் பற்றிய சட்டமூலம், மீதான நாடாளுமன்ற விவாதத்தை சிறிலங்கா அரசாங்கம் கைவிட்டுள்ளது.
பலவந்தமாக ஆட்களைக் காணாமல் போகச் செய்வதில் இருந்து பாதுகாக்கும் அனைத்துலக பிரகடன சட்டமூலம் இன்று சிறிலங்கா நாடாளுமன்றத்தில் விவாதத்துக்கு எடுத்துக் கொள்ளப்படும் வாய்ப்பு இல்லை என்று நாடாளுமன்ற உயர் அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.
புதிய அரசியலமைப்போ, அரசியலமைப்பு திருத்தமோ தேவையில்லை என்று, செல்வாக்குமிக்க மூன்று பௌத்த பீடங்களான- சியாம், அமரபுர, ராமன்ய, நிக்காயாக்களின் மகாநாயக்க தேரர்களும், ஏனைய சங்க சபாக்களும் ஒரு மனதாக நேற்று தீர்மானித்துள்ளனர்.
கண்டியில் தலதா மாளிகைக்கு மேலாக- விமானங்கள் பறக்கத் தடை செய்யப்பட்ட பகுதிக்கு மேலாகப் பறந்ததால் தான், இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியின் பயணத்துக்காக கொண்டு வரப்பட்ட உலங்குவானூர்திகளில் ஒன்று பழுதடைந்ததாக உள்ளூர் வாசிகள் தெரிவித்ததாக கொழும்பு ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.
இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியின் பயணத்துக்காக ஒழுங்கு செய்யப்பட்டிருந்த உலங்குவானூர்திகளில் ஒன்று பழுதடைந்த நிலையில் கண்டியில் தரித்து நிற்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
நாட்டின் அதிகாரத்தைக் கைப்பற்றுவதற்கு கூட்டு எதிரணி சதித் திட்டம் எதையும் தீட்டவில்லை என்று சிறிலங்காவின் முன்னாள் ஆட்சியாளர் மகிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார்.
எதிர்வரும் வியாழக்கிழமை சிறிலங்காவுக்குப் பயணம் மேற்கொள்ளவுள்ள இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி 24 மணி நேரம் வரையே அங்கு தங்கியிருப்பார் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.