18 இலங்கையர்களை கொழும்புக்கு நாடு கடத்தியது அவுஸ்ரேலியா
அவுஸ்ரேலியாவில் சட்டவிரோதமாக குடியேறிய 18 இலங்கையர்கள் இன்று நாடு கடத்தப்பட்ட நிலையில், கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்தனர்.
அவுஸ்ரேலியாவில் சட்டவிரோதமாக குடியேறிய 18 இலங்கையர்கள் இன்று நாடு கடத்தப்பட்ட நிலையில், கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்தனர்.
கட்டுநாயக்க அனைத்துலக விமான நிலையத்துக்கு வரும் பயணிகள் அனைவரையும், நான்கு மணிநேரம் முன்னதாகவே விமான நிலையத்துக்கு வருமாறு அறிவிக்கப்பட்டுள்ளது.
ஜப்பானியப் பிரதமர் ஷின்சோ அபேயின் சிறப்பு ஆலோசகர் கலாநிதி ஹிரோரோ இசுமி தலைமையிலான ஜப்பானிய அதிகாரிகளின் சிறப்புக் குழுவொன்று சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேனவைச் சந்தித்துப் பேச்சு நடத்தியுள்ளது.
16 ஆண்டுகளுக்குப் பின்னர், சிறிலங்காவின் பொருளாதார வளர்ச்சி கடந்த ஆண்டில் மிகக் குறைந்த நிலை பதிவாகியுள்ளதாக சிறிலங்கா மத்திய வங்கியின் ஆண்டு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
கட்டுநாயக்க விமான நிலையத்தின் கூரை பெயர்ந்து விழுந்ததால், குடிவரவுத் திணைக்களப் பணிகள் பாதிக்கப்பட்டன. கடும் மழை காரணமாக, கடந்த வெள்ளிக்கிழமை கட்டுநாயக்க விமான நிலையத்தின் குடிவரவுப் பகுதியில் உள்ள கூரை ஆங்காங்கே பெயர்ந்து விழுந்தது.
இரண்டு நாடுகளில் புகலிடம் நிராகரிக்கப்பட்ட நிலையில் நாடுகடத்தப்பட்ட 26 இலங்கையர்களுடன், இரண்டு சிறப்பு விமானங்கள் இன்று காலை கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்துள்ளனர்.
ஐந்து நாட்கள் பயணமாக பிரித்தானிய இளவரசர் எட்வேர்ட் தமது துணைவியுடன் சிறிலங்கா வந்துள்ளார். இன்று காலை கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்த பிரித்தானிய இளவரசரை, சிறிலங்காவின் வெளிவிவகார இராஜாங்க அமைச்சர் வசந்த சேனநாயக்க வரவேற்றார்.
இந்தோனேசிய அதிபர் ஜோகோ விடோடோ இரண்டு நாட்கள் அதிகாரபூர்வ பயணமாக நேற்று பிற்பகல் சிறிலங்காவை வந்தடைந்தார். சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேனவின் அழைப்பின் பேரிலேயே அவர் இந்தப் பயணத்தை மேற்கொண்டுள்ளார்.
கட்டுநாயக்க விமான நிலையத்தில் வந்திறங்கிய நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தின் உறுப்பினர் ஒருவர், சிறிலங்காவுக்குள் நுழைவதற்கு அனுமதி மறுக்கப்பட்டு, நாடு கடத்தப்படுவதற்காக தடுத்து வைக்கப்பட்டுள்ளார்.
மலேசியப் பிரதமர் அப்துல் நஜீப் ரசாக் மூன்று நாட்கள் அரசுமுறைப் பயணமாக இன்று காலை சிறிலங்காவை வந்தடைந்தார். சிறப்பு விமானம் மூலம், மலேசியப் பிரதமர் இன்று காலை 8.40 மணியளவில் கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்தார்.