தவறு செய்தவர்களை பாதுகாப்பது நியாயமற்றது – அரச தலைவர்களுக்கு சரத் பொன்சேகா பதிலடி
இராணுவ சீருடையில் போர்வீரர்கள் என்ற போர்வைக்குள் இருந்து கொண்டு தவறு செய்தவர்களை பாதுகாக்க முற்படுவது நியாயமற்றது என்பதை ஒவ்வொரு அரசியல்வாதியும், அரசாங்கத்தில் உள்ள தலைவர்களும் புரிந்து கொள்ள வேண்டும் என்று சிறிலங்காவின் அமைச்சரும் முன்னாள் இராணுவத் தளபதியுமான பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா தெரிவித்துள்ளார்.