மேலும்

Tag Archives: இந்தியா

இன்று காலை நேபாளம் செல்கிறார் மகிந்த – நரேந்திர மோடியுடன் முக்கிய சந்திப்பு

நேபாளத் தலைநகர் காத்மண்டுவில் 18வது சார்க் மாநாடு நாளை ஆரம்பமாகவுள்ளது. இருநாட்கள் நடைபெறவுள்ள இந்த மாநாட்டில், சிறிலங்கா, இந்தியா, பாகிஸ்தான், நேபாளம், பூட்டான், மாலைதீவு, ஆப்கானிஸ்தான், பங்களாதேஸ் ஆகிய எட்டு உறுப்பு நாடுகளினதும், தலைவர்கள் கலந்து கொள்கின்றனர்.

ஒரு நாளில் 40 ஆயிரம் கப்பல்களைக் கண்காணிக்கும் பொறிமுறையை உருவாக்குகிறது இந்தியா

இந்தியப் பெருங்கடலில் கப்பல்களின் நடமாட்டத்தைக் கண்காணிக்க இந்தியா உருவாக்கவுள்ள மிகப்பெரிய கண்காணிப்பு வலையமைப்பினால், நாளொன்றுக்கு, 40 ஆயிரம் கப்பல்களைக் கண்காணிக்க முடியும் என்று இந்தியக் கடற்படை தெரிவித்துள்ளது.

இந்தியா: ‘மத்திய அரசாங்கத்திற்கும் – மாநிலங்களுக்கும்’ இடையேயான உறவில் மாற்றம் வேண்டும் – ஆய்வாளர்

புலம்பெயர்ந்த தமிழர் அதிகம் வாழும் நாடுகளுக்கு நியமிக்கப்படும் இந்தியத் தூதுவர்கள் தனது மாநிலத்திலிருந்து தெரிவு செய்யப்பட வேண்டும் என தமிழ்நாடானது நீண்டகாலமாகக் கோரிவருகிறது. இதன்மூலம் தமிழ்நாடானது இந்திய மத்திய அரசாங்கத்தில் பூகோள-மூலோபாய அதிகார பலம்பொருந்திய மாநிலமாக உருவாக முடியும்.

தூக்கில் இருந்து மீண்ட மீனவர்கள் நள்ளிரவில் சென்னை திரும்பினர்

சிறிலங்கா அரசாங்கத்தால் விடுதலை செய்யப்பட்ட ஐந்து தமிழ்நாட்டு மீனவர்களும் நேற்று நள்ளிரவு விமானம் மூலம் சென்னை திரும்பியுள்ளனர்.

சிறிலங்காவின் நிபந்தனைக்கு இணங்கியது இந்தியா

ஐந்து தமிழ்நாட்டு மீனவர்களுக்கு கொழும்பு மேல் நீதிமன்றம் விதித்திருந்த மரணதண்டனைக்கு எதிராக, சமர்ப்பித்திருந்த மேல்முறையீட்டு மனுவை கொழும்பிலுள்ள இந்தியத் தூதரகம் விலக்கிக் கொண்டிருப்பதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.

கடல் பாதுகாப்புக்கு பாரிய ரேடர் கண்காணிப்பு வலையமைப்பை உருவாக்குகிறது இந்தியா

இந்தியாவைச் சுற்றியுள்ள கடற்பிராந்தியத்தைக் கண்காணிக்கும் வகையில், பாரிய ரேடர் கண்காணிப்பு வலையமைப்பு ஒன்றை இந்தியப் பாதுகாப்பு அமைச்சு ஆரம்பிக்கவுள்ளது.

வடக்கு மாகாணசபைக்குள் முரண்பாட்டை ஏற்படுத்தும் இந்தியாவின் வாகனங்கள்

வடக்கு மாகாணசபை உறுப்பினர்களின் பாவனைக்கு எட்டு வாகனங்களை வழங்க இந்தியா முன்வந்திருப்பது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.

நீர்மூழ்கி வருகை குறித்து முன்கூட்டியே தகவல் தருவதில்லை – சிறிலங்கா மீது இந்தியா விசனம்

சீன நீர்மூழ்கிகளின் கொழும்பு வருகை பற்றிய தகவல்களை சிறிலங்கா முன்கூட்டியே தெரியப்படுத்துவதில்லை என்று இந்தியா விசனம் தெரிவித்துள்ளது.

சீனாவுடன் சேர்ந்து இந்தியாவின் கோபத்தைக் கிளறாதீர்கள் – சிறிலங்காவுக்கு சம்பந்தன் எச்சரிக்கை

குறுகிய அரசியல் நலன்களுக்காக இந்தியா உள்ளிட்ட பிராந்திய நாடுகளுடனான உறவைப் புறம்தள்ளி விட்டு, சீனாவுடன் உறவைப் பலப்படுத்துவதன் மூலம், சிறிலங்கா ஆபத்தையே விலைகொடுத்த வாங்க நேரிடும் என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் எச்சரித்துள்ளார்.

இந்தியாவுக்கு எதிராக சூழ்ச்சி செய்யவில்லை – என்கிறது சிறிலங்கா

சிறிலங்காவில் பல்வேறு திட்டங்களில் சீனாவின் தலையீடுகள் இந்தியாவுக்கு எதிராக மேற்கொள்ளப்படும் சூழ்ச்சி என்று தெரிவிக்கப்பட்ட குற்றச்சாட்டுகளை சிறிலங்கா அரசாங்கம் நிராகரித்துள்ளது.