புதிய திட்டங்கள் தொடர்பாக சிறிலங்காவுடன் பேசுகிறதாம் சீனா
சிறிலங்காவில் புதிய திட்டங்களில் முதலீடு செய்வது குறித்து சிறிலங்கா அரசாங்கத்துடன் சினா பேச்சுக்களை நடத்தி வருவதாக சிறிலங்கா பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.
சிறிலங்காவில் புதிய திட்டங்களில் முதலீடு செய்வது குறித்து சிறிலங்கா அரசாங்கத்துடன் சினா பேச்சுக்களை நடத்தி வருவதாக சிறிலங்கா பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.
அம்பாந்தோட்டை துறைமுகத்தில், கப்பல் கட்டும் மற்றும் கப்பல்களைப் பழுதுபார்க்கும் தளத்தை அமைப்பது தொடர்பான சாத்திய ஆய்வை சீன நிறுவனம் மேற்கொள்வதற்கு சிறிலங்கா அமைச்சரவை அனுமதி அளித்துள்ளது.
சிறிலங்காவின் முன்னாள் ஆட்சியாளர் மகிந்த ராஜபக்ச ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் சார்பில் குருநாகல மாவட்டத்திலும், முன்னாள் சபாநாயகர் சமல் ராஜபக்ச அம்பாந்தோட்டை மாவட்டத்திலும் போட்டியிடவுள்ளதாக கொழும்பு ஆங்கில நாளிதழ் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.
நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிடுவதற்கு மகிந்த ராஜபக்சவுக்கு ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி நிபந்தனைகள் எதையும் விதிக்கவில்லை என்று அந்தக் கட்சியின் பொதுச்செயலர் சுசில் பிரேம்ஜெயந்த் தெரிவித்துள்ளார்.
ஜனவரி 8ஆம் நாள் நடந்த அமைதிப் புரட்சி தடம் புரள்வதற்கு தாம் ஒருபோதும் அனுமதிக்கப் போவதில்லை என்று சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.
வரும் நாடாளுமன்றத் தேர்தலில் சிறிலங்காவின் முன்னாள் ஆட்சியாளர் மகிந்த ராஜபக்ச குருநாகல மாவட்டத்தில் போட்டியிடவுள்ளதாக, முன்னாள் அமைச்சர் ரி.பி.எக்கநாயக்க தெரிவித்துள்ளார்.
தாம் விரைவில் அரசியலில் இருந்து ஓய்வுபெறவிருப்பதாக சிறிலங்காவின் முன்னாள் ஆட்சியாளர் மகிந்த ராஜபக்சவின் மூத்த சகோதரரும், நாடாளுமன்ற சபாநாயகருமான சமல் ராஜபக்ச தெரிவித்துள்ளார்.
சிறிலங்காவின் முன்னாள் அதிபர் மகிந்த ராஜபக்சவின் தலைமைப் பாதுகாப்பு அதிகாரியான, கேணல் மகேந்திர பெர்னான்டோ, சிறிலங்கா இராணுவத்தின் சிறப்பு விசாரணைப் பிரிவினால் இன்று விசாரணைக்குட்படுத்தப்பட்டுள்ளார்.
சிறிலங்காவின் உள்நாட்டு விவகாரங்களில், எந்தவொரு மேற்குலக சக்தியும் தலையீடு செய்யவில்லை என்று சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.
சிறிலங்காவில் இது தொடர்பாக முன்னர் கேள்வியெழுப்பியிருந்தால் அவர்கள் தண்டிக்கப்படுவர். ஏனெனில் மகிந்த ராஜபக்ச அதிகாரத்துவ ஆட்சியை மேற்கொண்டிருந்தார்.இவர் தேர்தலில் தோற்கடிக்கப்பட்ட பின்னர், மகிந்த ராஜபக்சவின் ஆட்சிக்காலத்தில் இடம்பெற்ற பல்வேறு மோசடிகள் தொடர்பில் சிறிலங்கா விழித்துக் கொண்டுள்ளது.