சிறிலங்காவிடம் அதிருப்தியை வெளியிட்டது சீனா
அம்பாந்தோட்டையில் காணிகளை அபகரிக்க சீனா முனைவதாக, மேற்கொள்ளப்படும் பரப்புரைகள் தொடர்பாக சிறிலங்கா அரசாங்கத்திடம் சீன அரசாங்கம் அதிருப்தியை வெளிப்படுத்தியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
அம்பாந்தோட்டையில் காணிகளை அபகரிக்க சீனா முனைவதாக, மேற்கொள்ளப்படும் பரப்புரைகள் தொடர்பாக சிறிலங்கா அரசாங்கத்திடம் சீன அரசாங்கம் அதிருப்தியை வெளிப்படுத்தியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
மைத்திரிபால சிறிசேன- ரணில் விக்கிரமசிங்க கூட்டு அரசாங்கம் சீனாவுடன் கூட்டாக இணைந்து செயற்படுவது, இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியை நிச்சயம் குழப்பத்துக்கு உள்ளாக்கியிருக்கும் என்று சிறிலங்காவின் முன்னாள் பாதுகாப்புச் செயலர் கோத்தாபய ராஜபக்ச தெரிவித்துள்ளார்.
சிறிலங்காவில் ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்துவது தொடர்பாக, சீனாவுடன் கூட்டு எதிரணி பேச்சு நடத்தியுள்ளதாக வெளியாகும் செய்திகள் வெறும் வதந்தியே என்று சிறிலங்கா பொதுஜன முன்னணியின் தலைவர் பேராசிரியர் ஜி.எல்.பீரிஸ் நிராகரித்துள்ளார்.
அம்பாந்தோட்டை துறைமுகத்தின் 80 வீத உரிமையை சீனாவுக்கு விற்கும் சிறிலங்கா அரசாங்கத்தின் முயற்சிக்கு எதிராக, நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்யப் போவதாக, நாடாளுமன்ற உறுப்பினர் வாசுதேவ நாணயக்கார தெரிவித்தார்.
சிறிலங்கா கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரல் ரவீந்திர விஜேகுணவர்த்தனவுக்கு உயர்மட்டப் பதவி ஒன்று வழங்கப்படவுள்ளதாக கொழும்பு ஆங்கில வாரஇதழ் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.
சிறிலங்கா கடற்படையின் பெயரைக் கெடுப்பதற்காகவே, அம்பாந்தோட்டை துறைமுகப் பணியாளர்களின் போராட்டத்தை குழப்புவதற்கு, கடற்படையை அரசாங்கம் அனுப்பியதாக முன்னாள் அதிபர் மகிந்த ராஜபக்ச கூறிய குற்றச்சாட்டை, சிறிலங்கா அரசாங்கம் நிராகரித்துள்ளது.
அம்பாந்தோட்டை துறைமுகத்துக்கு அருகே நிரந்தர கடற்படைத் தளம் ஒன்றை அமைக்கவும், மத்தல விமான நிலையம் அருகே நிரந்த விமானப்படைத் தளம் ஒன்றை அமைக்கவும் சிறிலங்கா அரசாங்கம் உத்தரவிட்டுள்ளது.
அம்பாந்தோட்டை துறைமுகத்தில் தடுத்து வைக்கப்பட்டிருந்த கப்பல்களை விடுவிக்க சிறிலங்கா கடற்படைக்கு, அரசாங்கமே உத்தரவிட்டது என்று சிறிலங்கா பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்தார்.
அம்பாந்தோட்டையில் 15 ஆயிரம் ஏக்கர் காணிகளை சீனாவுக்கு குத்தகைக்கு வழங்கும் திட்டத்துக்கு எதிர்ப்புத் தெரிவித்து போராட்டங்கள் ஆரம்பமாகியுள்ளன.
அம்பாந்தோட்டை துறைமுகத்தில், கடந்த சனிக்கிழமை ஊடகவியலாளர் ஒருவர் சிறிலங்கா கடற்படைத் தளபதியால் தாக்கப்பட்டதாக குற்றம்சாட்டப்படும் சம்பவம் தொடர்பாக, சிறிலங்கா கடற்படை அறிக்கை ஒன்றை சமர்ப்பித்துள்ளது.