மேலும்

Tag Archives: மகிந்த ராஜபக்ச

சர்ச்சைக்குரிய சிங்கக்கொடி தமக்கு எதிரான சூழ்ச்சியாம் – குற்றம்சாட்டுகிறார் மகிந்த

ராஜபக்சக்களுக்கு ஆதரவாக நடத்தப்பட்ட கொழும்பில் நடத்தப்பட்ட ஆர்ப்பாட்டங்களில், சர்ச்சைக்குரிய சிங்கக் கொடிகளைப் பயன்படுத்தியது, ஒரு சூழ்ச்சியாக இருக்கக்கூடும் என்று தெரிவித்துள்ளார் சிறிலங்காவின் முன்னாள் ஆட்சியாளர் மகிந்த ராஜபக்ச.

மைத்திரியைச் சந்திக்க மறுத்த மகிந்த – பின்னணி அம்பலம்

ராஜபக்ச குடும்பத்தினருக்கு எதிராகவும், தனது ஆட்சியின் போது, முக்கிய பங்கு வகித்த அதிகாரிகளுக்கு எதிராகவும், அரசாங்கம் நடவடிக்கை எடுத்து வருவதாலேயே, சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேனவுடன் இன்று நடத்தவிருந்த சந்திப்பை மகிந்த ராஜபக்ச ரத்துச் செய்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

மைத்திரியை சந்திக்க மகிந்தவுக்கு நேரமில்லையாம் – நாளைய சந்திப்பு ரத்து

சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேனவுக்கும், முன்னாள் அதிபர் மகிந்த ராஜபக்சவுக்கும் நாளை ஏற்பாடு செய்யப்பட்டிருந்த சந்திப்பு ரத்துச் செய்யப்பட்டுள்ளதாக, ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் நாடாளுமன்ற உறுப்பினர் குமார வெல்கம தெரிவித்தார்.

“நான் இன்னும் ஓய்வுபெறவில்லை” – மீண்டும் வருவேன் என்று சூசகமாக மிரட்டுகிறார் மகிந்த

தாம் இன்னமும் அரசியலில் இருந்து ஓய்வுபெறவில்லை என்று, சிறிலங்காவின் முன்னாள் ஆட்சியாளர் மகிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார். ஏஎவ்பி செய்தியாளர் அமால் ஜெயசிங்கவுக்கு நேற்று அளித்த செவ்வி ஒன்றிலேயே அவர் இவ்வாறு கூறியுள்ளார்.

அழைப்பாணை அனுப்பும் அதிகாரம் சபாநாயகருக்கு இல்லை – அமைச்சர் விஜேதாச ராஜபக்ச

இலஞ்ச மற்றும் ஊழல் குற்றச்சாட்டுகள் குறித்து விசாரிக்கும், ஆணைக்குழுவின் அதிகாரிகளுக்கு அழைப்பாணை அனுப்பும் அதிகாரம் நாடாளுமன்ற சபாநாயகருக்கு இல்லை என்று, சிறிலங்காவின் நீதி அமைச்சர் விஜேதாச ராஜபக்ச தெரிவித்துள்ளார்.

மகிந்தவைப் பிரதமராக நியமிக்க வேண்டும்- என்கிறார் கோத்தா

நாட்டைக் காப்பாற்றுவதற்கு, சிறிலங்கா அதிபர் விரைவாக நாடாளுமன்றத் தேர்தலை நடத்தி மகிந்த ராஜபக்சவை பிரதமராக நியமிக்க வேண்டும், என்று தெரிவித்துள்ளார் முன்னாள் பாதுகாப்புச்செயலர் கோத்தாபய ராஜபக்ச.

மகிந்த – மைத்திரி சந்தித்துப் பேச இணக்கம்

சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேனவும், சிறிலங்காவின் முன்னாள் ஆட்சியாளர் மகிந்த ராஜபக்சவும் நேரடியாகச் சந்தித்துப் பேச இணக்கம் தெரிவித்துள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

நாடாளுமன்றம் 27ம் நாள் வரை ஒத்திவைப்பு – மகிந்த ஆதரவாளர்களின் போராட்டம் கைவிடப்பட்டது

மகிந்த ராஜபக்சவுக்கு ஆதரவு தெரிவித்து நாடாளுமன்றத்துக்கு உள்ளேயும் வெளியேயும் நடத்தப்பட்ட ஆர்ப்பாட்டங்கள் முடிவுக்குக் கொண்டு வரப்பட்டுள்ள அதேவேளை, சிறிலங்கா நாடாளுமன்றக் கூட்டமும் வரும் 27ம் நாள் வரை ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

சிறிலங்கா நாடாளுமன்றத்தை முற்றுகையிட்டுள்ள மகிந்த ஆதரவாளர்கள்

சிறிலங்காவின் முன்னாள் ஆட்சியாளர் மகிந்த ராஜபக்சவை, இலஞ்ச ஊழல் ஒழிப்பு ஆணைக்குழு விசாரணைக்கு அழைத்துள்ளமைக்கு எதிர்ப்புத் தெரிவித்தும், அவருக்கு ஆதரவு தெரிவித்தும், சிறிலங்கா நாடாளுமன்ற வளாகப் பகுதியி்ல் பெரியளவிலான எதிர்ப்புப் போராட்டம் ஒன்று இடம்பெற்று வருகிறது.

மகிந்தவிடம் வீட்டுக்குச் சென்றே விசாரணை – ஆணைக்குழு தலைவர் இணக்கம்

சிறிலங்காவின் முன்னாள் ஆட்சியாளர் மகிந்த ராஜபக்சவை, அவரது இருப்பிடத்துக்குச் சென்றே விசாரிக்க இலஞ்ச ஊழல் ஒழிப்பு ஆணைக்குழுவின் தலைவர் ஜெகத் பாலபத்தபென்டி இணக்கம் தெரிவித்துள்ளதாக, சிறிலங்காவின் பிரதி சபாநாயகர் சந்திம வீரக்கொடி தெரிவித்துள்ளார்.