2018இல் வணிகம் செய்ய சிறந்த நாடுகளின் பட்டியலில் சிறிலங்காவுக்கு 111 ஆவது இடம்
2018ஆம் ஆண்டில், உலகில் வணிகம் செய்வதற்கு சிறந்த நாடுகளின் பட்டியலை உலக வங்கி வெளியிட்டுள்ளது. 190 நாடுகளின் இந்தப் பட்டியலில் சிறிலங்கா 111 ஆவது இடத்தில் உள்ளது.
2018ஆம் ஆண்டில், உலகில் வணிகம் செய்வதற்கு சிறந்த நாடுகளின் பட்டியலை உலக வங்கி வெளியிட்டுள்ளது. 190 நாடுகளின் இந்தப் பட்டியலில் சிறிலங்கா 111 ஆவது இடத்தில் உள்ளது.
அமெரிக்க இராஜாங்கத் திணைக்களத்தின் அரசியல் விவகாரங்களுக்கான உதவிச் செயலர் தோமஸ் சானொன் நாளை மறுநாள் சிறிலங்காவுக்குப் பயணம் மேற்கொள்ளவுள்ளார்.
சிறிலங்காவில் ஜனநாயக மறுசீரமைப்பு பணிகளுக்காக அமெரிக்கா 14 மில்லியன் டொலர்களை வழங்கியுள்ளது. சிறிலங்கா நாடாளுமன்ற சபாநாயகர் கரு ஜெயசூரிய நேற்று இந்தத் தகவலை வெளியிட்டுள்ளார்.
அமெரிக்காவுக்குப் பயணம் மேற்கொண்டுள்ள சிறிலங்கா நிதி அமைச்சர் மங்கள சமரவீர, அமெரிக்காவின் வர்த்தகச் செயலர் வில்பர் ரோசை சந்தித்துப் பேச்சு நடத்தியுள்ளார்.
சிறிலங்காவுக்கும் இன்னொரு நாட்டுக்கும் இடையிலான உறவு தொடர்பாக கருத்து வெளியிடுவதற்கு அமெரிக்காவுக்கு உரிமை கிடையாது என்று லங்கா சமசமாசக் கட்சியின் தலைவரும் முன்னாள் அமைச்சருமான பேராசிரியர் திஸ்ஸ விதாரண தெரிவித்துள்ளார்.
அமெரிக்கப் பாதுகாப்புத் திணைக்களத்தின், பிரதி உதவிச் செயலர் கேணல் ஜோ பெல்டர், சிறிலங்காவுக்குப் பயணம் மேற்கொண்டுள்ளார்.
அமைதியாகப் போராட்டம் நடத்திய தம்மை சிறிலங்கா காவல்துறை கைது செய்திருப்பதாக, சிறிலங்காவின் முன்னாள் ஆட்சியாளர் மகிந்த ராஜபக்சவின் மூத்த புதல்வரும் நாடாளுமன்ற உறுப்பினருமான நாமல் ராஜபக்ச, ஐ.நா மனிதஉரிமை ஆணையாளரிடமும், அமெரிக்காவிடமும் முறையிட்டுள்ளார்.
சிறிலங்கா கடற்படை ஆண்டு தோறும் நடத்தும் கடல்சார் பாதுகாப்புக் கருத்தரங்கான ‘காலி கலந்துரையாடல்-2017’ இன்று கொழும்பில் உள்ள கோல்பேஸ் விடுதியில் ஆரம்பமானது.
சிறிலங்கா விமானப்படை ஜெட் போர் விமானங்கள் உள்ளிட்ட 18 புதிய விமானங்களைக் கொள்வனவு செய்யத் திட்டமிட்டுள்ளது.
பூகோள மட்டத்தில் அமெரிக்காவைத் தனிமைப்படுத்துவதற்கு சீனா முயற்சிகளை மேற்கொள்வதால் இதனை எதிர்ப்பதற்கு அமெரிக்கா பல்வேறு மூலோபாயங்களை வகுத்துள்ள போதிலும் தொடர்ந்தும் சீனா தனது பூகோள அரசியல் இலக்கை அடைவதில் குறியாகவே உள்ளது.