மேலும்

காணாமல் ஆக்கப்படுவதில் இருந்து பாதுகாக்கும் சட்டமூலம் இன்று நாடாளுமன்றம் வராது?

பலவந்தமாக ஆட்களைக் காணாமல் போகச் செய்வதில் இருந்து பாதுகாக்கும் அனைத்துலக பிரகடன சட்டமூலம் இன்று சிறிலங்கா நாடாளுமன்றத்தில் விவாதத்துக்கு எடுத்துக் கொள்ளப்படும் வாய்ப்பு இல்லை என்று நாடாளுமன்ற உயர் அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.

பயங்கரவாத தடைச்சட்டத்தை நீக்குவதற்கும் மகாநாயக்கர்கள் எதிர்ப்பு

தற்போது நடைமுறையில் உள்ள பயங்கரவாத தடைச்சட்டத்தை நீக்குவதற்கும், சிறிலங்காவின் பௌத்த பீடங்கள் எதிர்ப்புத் தெரிவித்துள்ளன.

மைத்திரியை இலக்கு வைத்தவருக்கு அடைக்கலம் கொடுத்த 62 வயதுப் பெண்ணுக்கு சிறைத்தண்டனை

தற்போதைய சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன, 2008 ஆம் ஆண்டு விவசாய அமைச்சராக இருந்த போது, அவரைக் கொலை செய்ய முயன்ற விடுதலைப் புலிகளின் பெண் போராளி ஒருவருக்கு அடைக்கலம் கொடுத்தார் என்று குற்றம்சாட்டப்பட்ட 62 வயது பெண் ஒருவருக்கு 2 ஆண்டு சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

ஆளுனர் பதவி கிடைக்காததால் ஏமாற்றம் – பதவி விலகுகிறார் கட்டாருக்கான தூதுவர் ஏ.எஸ்.பி.லியனகே

கிழக்கு மாகாண ஆளுனர் பதவியை எதிர்பார்த்திருந்த கட்டாருக்கான சிறிலங்கா தூதுவர் ஏ.எஸ்.பி.லியனகே, அந்தப் பதவி கிடைக்காததையடுத்து, தனது தூதுவர் பதவியை விட்டு விலகவுள்ளார்.

புதிய அரசியலமைப்போ, திருத்தமோ தேவையில்லை – பௌத்த பீடங்கள் கூட்டாக அறிவிப்பு

புதிய அரசியலமைப்போ, அரசியலமைப்பு திருத்தமோ தேவையில்லை என்று, செல்வாக்குமிக்க மூன்று பௌத்த பீடங்களான- சியாம், அமரபுர, ராமன்ய,  நிக்காயாக்களின் மகாநாயக்க தேரர்களும், ஏனைய சங்க சபாக்களும் ஒரு மனதாக நேற்று தீர்மானித்துள்ளனர்.

சிறிலங்கா அதிபரின் செயலரானார் ஒஸ்ரின் பெர்னான்டோ

சிறிலங்கா அதிபரின் செயலராக, ஒஸ்ரின் பெர்னான்டோ இன்று பதவியைப் பொறுப்பேற்றுக் கொண்டுள்ளார். சிறிலங்கா அதிபரின் அதிகாரபூர்வ இல்லத்தில் இன்று காலை நடந்த நிகழ்வில்,  அதிபர் மைத்திரிபால சிறிசேனவிடம் இருந்து ஒஸ்ரின் பெர்னான்டோ நியமனக் கடிதத்தை பெற்றுக் கொண்டார்.

போர்க்குற்ற வழக்குகளில் அனுபவமுள்ள கபில வைத்தியரத்ன பாதுகாப்புச் செயலராக நியமனம்

மூத்த மேலதிக சொலிசிற்றர் ஜெனரலும், அதிபர் சட்டவாளருமான, கபில வைத்தியரத்ன, சிறிலங்காவின் புதிய பாதுகாப்புச் செயலராக நியமிக்கப்பட்டுள்ளார். சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன இன்று இந்த நியமனத்தை வழங்கியுள்ளார்.

கிழக்கு மாகாண ஆளுனராக றோகித போகொல்லாகம நியமனம்

கிழக்கு மாகாண ஆளுனராக சிறிலங்காவின் முன்னாள் வெளிவிவகார அமைச்சர் றோகித போகொல்லாகம நியமிக்கப்பட்டுள்ளார். கிழக்கு மாகாண ஆளுனராக ஒஸ்ரின் பெர்னான்டோ இன்று சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேனவினால் நியமிக்கப்பட்டார்.

சிறிலங்கா இராணுவத் தளபதியாக லெப்.ஜெனரல் மகேஸ் சேனநாயக்க நியமனம்

சிறிலங்கா இராணுவத்தின் புதிய தளபதியாக லெப்.ஜெனரல் மகேஸ் சேனநாயக்க நியமிக்கப்பட்டுள்ளார். சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன இன்று காலை இந்த நியமனத்தை அறிவித்துள்ளார்.

புலனாய்வு விவகாரங்கள் குறித்து கருத்து வெளியிட முடியாது – அமெரிக்க தூதரகம்

புலனாய்வு விவகாரங்கள் தொடர்பாக எந்தக் கருத்தையும் வெளியிட முடியாது என்று சிறிலங்காவுக்கான அமெரிக்கத் தூதரகம் தெரிவித்துள்ளது.