மேலும்

அதிகாரப்பகிர்வு தமிழ் மக்களின் பிரச்சினைக்கு தீர்வைத் தராது- என்கிறார் கோத்தா

மேலதிக அதிகாரப் பகிர்வு தமிழ்மக்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகளைத் தீர்க்காது என்று சிறிலங்காவின் முன்னாள் பாதுகாப்புச் செயலர் கோத்தாபய ராஜபக்ச தெரிவித்துள்ளார்.

இடைக்கால அறிக்கையை திரும்பப் பெற வேண்டும் – கோட்டே கல்யாணி காரக சங்க சபா முடிவு

இப்போதைய சூழலுக்குப் புதிய அரசியலமைப்பு பொருத்தமில்லை என்பதால், வழிநடத்தல் குழுவினால் தயாரிக்கப்பட்ட இடைக்கால அறிக்கையை தற்காலிகமாக விலக்கிக் கொள்ள வேண்டும் என்று கோட்டே, சிறி கல்யாணி சமக்ரி தர்ம மகாசங்க சபாவின், கல்யாணி காரக சபா ஒருமனதாக தீர்மானித்துள்ளது.

இம்மாதம் புதுடெல்லிக்குப் பறக்கிறார் மகிந்த

சிறிலங்காவின் முன்னாள் ஆட்சியாளர் மகிந்த ராஜபக்ச இந்தமாதம் புதுடெல்லிக்குப் பயணம் மேற்கொள்வார் என்று எதிர்பார்க்கப்படுவதாக, கொழும்பு ஆங்கில ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.

துப்பாக்கிச் சூட்டில் படுகாயமடைந்த இளைஞன் மரணம் – யாழ். நகரில் அதிரடிப்படை குவிப்பு

யாழ். அரியாலை கிழக்கு, மணியம்தோட்டம் பகுதியில் நேற்றுப் பிற்பகல் துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்காகி படுகாயமடைந்த இளைஞன், சிகிச்சை பலனின்றி, நேற்றிரவு மரணமானார். இதையடுத்து, யாழ்ப்பாணத்தில் பெருமளவு காவல்துறையினர் குவிக்கப்பட்டு பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.

அரியாலையில் துப்பாக்கிச் சூடு- இளைஞன் படுகாயம்

யாழ்ப்பாணம், அரியாலை பகுதியில் இன்று பிற்பகல் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டுச் சம்பவம் ஒன்றில் இளைஞன் ஒருவர் படுகாயமடைந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

நிலைமாறும் உலகில் புலம்பெயர் தமிழர்கள் : பாகம்-1

உலகம் எங்கும் பரந்து வாழும் சமுதாயம் என்பதில் பெருமை கொண்டு வாழ்வது,  தமிழ் சமுதாயம் ஆகும்.  உள்நாட்டு யுத்தத்தால் ஈழத்தமிழர்கள் நாடுகள் பல கடந்து வாழ்கின்றனர். ஆனால், பல பத்தாண்டுகளுக்கு முன்னர் தமிழகத்திலிருந்து வேலையாட்களாகவும் போர் வீரர்களாகவும் இடம்பெயர்ந்த தமிழர்கள் இன்று அந்தந்த நாடுகளிலேயே தேசியம் பேசும் சுதேசிகளாக மாறி வாழ்கின்றனர்.

சிறிலங்காவின் உண்மை கண்டறியும் செயல்முறைகளில் வேகமில்லை – ஐ.நா சிறப்பு அறிக்கையாளர்

சிறிலங்காவில் உண்மை கண்டறியும் செயல்முறைகள் மிகவும் மெதுவாகவே முன்னெடுக்கப்படுவதாக, உண்மையை ஊக்குவித்தல், நீதி, இழப்பீடு மற்றும் மீள நிகழாமையை உத்தரவாதப்படுத்துவதற்கான, ஐ.நா சிறப்பு அறிக்கையாளர் பப்லோ டி கிரெய்ப் தெரிவித்துள்ளார்.

இந்தியா வழங்கிய ரோந்துக் கப்பல் சிறிலங்கா கடலோரக் காவல் படையில் இணைப்பு

சிறிலங்காவுக்கு இந்தியா அன்பளிப்பாக வழங்கிய ஆழ்கடல் கண்காணிப்புக் கப்பல் நேற்று சிறிலங்கா கடலோரக் காவல் படையில் அதிகாரபூர்வமாக இணைத்துக் கொள்ளப்பட்டது.

சிறிலங்கா சுதந்திரக் கட்சியில் இருந்து நீக்கப்படுகிறார் மகிந்த?

சிறிலங்காவின் முன்னாள் அதிபர் மகிந்த ராஜபக்ச, சிறிலங்கா சுதந்திரக் கட்சி மற்றும் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியில் இருந்து, நீக்கப்படலாம் என்று கொழும்பு ஆங்கில வாரஇதழ் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.

இந்திய சரக்குக் கப்பல் காலி அருகே கடலில் மூழ்கியது – 7 மாலுமிகள் மீட்பு

தூத்துக்குடியில் இருந்து மாலைதீவுக்கு பொருட்களை ஏற்றிக் கொண்டு சென்ற சிறிய சரக்குக் கப்பல் காலிக்கு அப்பால் உள்ள கடலில் மூழ்கியது. இதில் இருந்த 7 இந்திய மாலுமிகளும் சிறிலங்கா கடற்படையினரால் காப்பாற்றப்பட்டனர்.