மேலும்

பிரிவு: செய்திகள்

விக்கி தலைமையில் தமிழர்களுக்கு புதிய தலைமைத்துவம் தேவை – என்கிறார் சுரேஸ்

வட மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் தலைமையில், தமிழ் மக்களுக்கு புதிய அரசியல் தலைமைத்துவம் தேவைப்படுகிறது என்று,  ஈ.பி.ஆர்.எல்.எப். தலைவர் சுரேஸ் பிரேமச்சந்திரன் தெரிவித்துள்ளார்.

மியாமி கடலில் இலங்கையர்களுடன் சென்ற படகு மீது அமெரிக்க கடலோரக் காவல்படை சூடு

அமெரிக்காவுக்குள் படகு ஒன்றின் மூலம் சட்டவிரோதமாக நுழைய முற்பட்டார்கள் என்ற குற்றச்சாட்டில் 6 இலங்கையர்கள் உள்ளிட்ட 15 பேர் அமெரிக்க கடலோரக் காவற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

அமெரிக்க உதவியுடன் விடுதலைப் புலிகளின் ஆயுதக் கப்பல்கள் அழிக்கப்பட்டது எப்படி?

நான்காவது கட்ட ஈழப்போரில், விடுதலைப் புலிகளின் ஆயுதக் கப்பல்கள் அமெரிக்காவின் உதவியுடன் எவ்வாறு சிறிலங்கா கடற்படையினால் மூழ்கடிக்கப்பட்டன என்ற தகவல்களை சிறிலங்காவின் முன்னாள் கடற்படைத் தளபதி அட்மிரல் ஜெயநாத் கொலம்பகே வெளியிட்டுள்ளார்.

உறங்குபவர்கள் போலக் காண்பவரை உசுப்பி எழுப்பவே ‘எழுக தமிழ்’ – விக்னேஸ்வரன்

உறங்குபவர்கள் போலக் காண்பவரை உசுப்பி எழுப்பவே இந்த எழுக தமிழ் நிகழ்வு என்று தமிழ் மக்கள் பேரவையின் இணைத்தலைவரும், வடக்கு மாகாண முதலமைச்சருமான சி.வி.விக்ணேஸ்வரன் தெரிவித்துள்ளார்.

மட்டக்களப்பில் ‘எழுக தமிழ்’ – ஆயிரக்கணக்கானோர் பங்கேற்பு

தமிழ் மக்கள் பேரவையின் ஏற்பாட்டில், மட்டக்களப்பில் இன்று, ஆயிரக்கணக்கான மக்களின் பங்கேற்புடன், ‘எழுக தமிழ்’ நிகழ்வு பேரெழுச்சியுடன் இடம்பெற்றது.

15 பேரின் பிரச்சினைகளுக்கு முன்னுரிமை அளிக்க அலரி மாளிகைச் சந்திப்பில் இணக்கம்?

காணாமலாக்கப்பட்டோரின் பிரதிநிதிகளுடன் அலரி மாளிகையில் நேற்று நடந்த சந்திப்பில், காணாமலாக்கப்பட்ட 15 பேர் தொடர்பான விவகாரங்களுக்கு முன்னுரிமை அளிக்க சிறிலங்கா அரசாங்கம் இணங்கியுள்ளதாக கொழும்பு ஆங்கில நாளிதழ் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.

11 தமிழர்கள் காணாமலாக்கப்பட்ட சம்பவங்கள் – சந்தேக நபர்களை கைது செய்ய உத்தரவு

2008ஆம் ஆண்டில் 11 தமிழர்கள் காணாமற்போகச் செய்யப்பட்ட சம்பவங்களுடன் தொடர்புடையவர்களைக் கைது செய்யுமாறு, கொழும்பு கோட்டே நீதிவான் லங்கா ஜெயரத்ன, குற்றப் புலனாய்வுப் பிரிவு அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளார்.

மட்டக்களப்பில் இன்று எழுக தமிழ் நிகழ்வு

தமிழ் மக்கள் பேரவையின் ஏற்பாட்டில், கிழக்கின் எழுக தமிழ் எழுச்சி நிகழ்வு மட்டக்களப்பில் இன்று காலை நடைபெற ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

காணாமல்போனோர் பணியகத்தின் அதிகாரத்தைக் குறைக்க திருத்தச்சட்டம்

காணாமல்போனோர் பணியகச் சட்டம் நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட ஐந்து மாதங்களிலேயே அதன் அதிகாரத்தைக் குறைக்கும் திருத்தச்சட்டம் ஒன்றை சிறிலங்கா அரசாங்கம் நிறைவேற்றவுள்ளது.

இரசாயன, உயிரியல், கதிரியக்க, அணு விவகாரங்களை கையாள சிறிலங்கா இராணுவத்தில் புதிய அணி

சிறிலங்கா இராணுவத்தில், இரசாயன, உயிரியல், கதிரியக்க மற்றும் அணுசக்தி விவகாரங்களைக் கையாள்வதற்காக புதிய படை அணி (ஸ்குவாட்ரன்) ஒன்று உருவாக்கப்பட்டுள்ளது.