மேலும்

பிரிவு: செய்திகள்

நான்கு அமைச்சர்கள் பதவி விலகினர் – பிரதமர் ரணில் மீது அதிருப்தி

சிறிலங்கா அரசாங்கத்தில் இருந்து நான்கு அமைச்சர்கள் பதவி விலகியுள்ளனர். சிறிலங்கா சுதந்திரக் கட்சியைச் சேர்ந்த அமைச்சர்களே, தற்போதைய அரசாங்கத்தின் மீது கொண்ட அதிருப்தியால் பதவி விலகினர்.

சிறிலங்கா சிங்களவருக்கே சொந்தம்; தமிழருக்கு உரிமையில்லை – என்கிறது சிங்கள அமைப்பு

சிறிலங்கா சிங்களவருக்குரிய நாடு என்பதால், தமிழ், முஸ்லிம் பிரதிநிதித்துவம் நீக்கப்பட்ட சிங்களக்கொடியே நாட்டின் தேசியக்கொடியாகப் பயன்படுத்தவேண்டும் என்று சுவர்ண ஹங்ச பதனம என்ற சிங்கள அடிப்படைவாத அமைப்பின் தலைவர் கால்லகே புண்ணியவர்தன தெரிவித்தார்.

அடுத்த மாதம் உள்நாட்டு போர்க்குற்ற விசாரணை ஆரம்பம் – சிறிலங்கா அதிபர்

புதிய போர்க்குற்ற விசாரணை அடுத்த மாதம் ஆரம்பிக்கப்படும் என்று சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். கொழும்பில் நேற்று  ஊடகங்களின் ஆசிரியர்கள் மற்றும் நிர்வாகிகளைச் சந்தித்துப் பேசிய போதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.

மாத்தறை அணிவகுப்பில் மைத்திரி மீது கல்வீச திட்டம்?- இரு கடற்படையினர் கைது

மாத்தறையில் நேற்று முன்தினம் நடந்த போர்வீரர்கள் நினைவு அணிவகுப்பின் போது, சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேனவின் மீது கல் வீசத் திட்டமிட்டார் என்ற சந்தேகத்தில் இரண்டு கடற்படையினர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

வித்தியா படுகொலை விசாரணை குற்றப்புலனாய்வுப் பிரிவுக்கு மாற்றம்

புங்குடுதீவில் பாடசாலை மாணவி வித்தியா கூட்டு வன்புணர்வுக்குப் பின்னர் படுகொலை செய்யப்பட்டது தொடர்பான விசாரணையை, சிறிலங்கா காவல்துறையின் குற்றப்புலனாய்வுப் பிரிவு பொறுப்பேற்றுள்ளது.

பிரித்தானியத் தூதுவர் சம்பந்தனைச் சந்தித்துப் பேச்சு

சிறிலங்காவுக்கான, பிரித்தானியாவின் புதிய தூதுவராகப் பொறுப்பேற்றுள்ள ஜேம்ஸ் டௌரிஸ் நேற்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தனைச் சந்தித்துப் பேச்சுக்களை நடத்தியுள்ளார்.

கோத்தாவைப் பாதுகாக்கும் மகிந்த நியமித்த நீதியரசர்கள் – உபுல் ஜோசப் பெர்னான்டோ

மகிந்த ராஜபக்ச மூன்றாவது தடவையாகவும் அதிபராகப் போட்டியிடலாம் எனத் தீர்ப்பு வழங்கிய அதே உச்சநீதிமன்றமே தற்போது கோத்தபாய ராஜபக்சவைப் பாதுகாத்துள்ளது.

மாணவி கொலைக்கு எதிரான போராட்டத்தில் ஈனச்செயல்கள் – முதல்வர் கண்டனம்

மாணவி வித்தியா கொலையைக் கண்டிக்கும் ஆர்ப்பாட்டங்களின் போது, ஈனச் செயல்களில் ஈடுபடுபவர்களையிட்டு மக்கள் விழிப்பாக இருக்க வேண்டும் என்று வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார்.

யாழ். நீதிமன்றப் பகுதியில் வன்முறையில் ஈடுபட்ட 127 பேர் கைது- மீண்டும் இராணுவ ரோந்து

புங்குடுதீவு மாணவி வித்தியா கொலையைக் கண்டித்து நடத்தப்பட்ட போராட்டத்தின் போது, யாழ். நீதிமன்ற வளாகத்துக்குள் நுழைந்து தாக்குதல் நடத்திய 127 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக, சிறிலங்கா காவல்துறைப் பேச்சாளர் ருவான் குணசேகர தெரிவித்துள்ளார்.

போர்க்களமானது யாழ். நீதிமன்ற வளாகம் – கல்வீச்சு, கண்ணீர் புகை, தடியடி, துப்பாக்கிச்சூடு

யாழ்.நீதிமன்ற வளாகத்தைச் சூழ்ந்து கொண்ட ஆர்ப்பாட்டக்காரர்கள், நீதிமன்றத்தின் மீது கல்வீசித் தாக்குதல் நடத்தியதையடுத்து, சிறிலங்கா காவல்துறையினர் கண்ணீர் புகைக்குண்டுகளை வீசியும், துப்பாக்கியால் சுட்டும், அவர்களை கலைத்தனர்.