மேலும்

பிரிவு: செய்திகள்

யாழ்.பல்கலைக்கழகத்தில் தொழில்நுட்ப நிறுவகத்தை அமைக்க சீனா உதவி

சிறிலங்காவுக்கு விஞ்ஞான தொழில்நுட்பத்துறையில் உதவிகளை வழங்க சீனா இணக்கம் தெரிவித்துள்ளதாக, சிறிலங்காவின் உயர்கல்வி அமைச்சர் கலாநிதி சரத் அமுனுகம தெரிவித்துள்ளார்.

இந்த ஆண்டு இறுதியில் கொழும்பு வருகிறார் ஒபாமா

அமெரிக்க அதிபர் பராக் ஒபாமா இந்த ஆண்டு இறுதியில் சிறிலங்காவுக்கு அதிகாரபூர்வ பயணத்தை மேற்கொள்ளவுள்ளதாக சிறிலங்கா அமைச்சர் லக்ஸ்மன் கிரியெல்ல தெரிவித்துள்ளார்.

கொழும்பு வந்த ஈரானிய எண்ணெய்க் கப்பல்- அமெரிக்கா விசாரணை

ஒரு மில்லியன் பரல் மசகு எண்ணெயுடன் கொழும்புத் துறைமுகத்துக்கு வந்த ஈரானிய எண்ணெய்க் கப்பல் தொடர்பாக அமெரிக்கா விசாரணைகளை நடத்தி வருவதாக, கொழும்பு ஆங்கில நாளிதழ் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.

புலிகளின் தாக்குதலில் மயிரிழையில் தப்பியவரே சிறிலங்கா விமானப்படையின் புதிய தளபதி

சிறிலங்கா விமானப்படையின் புதிய தளபதியாக நியமிக்கப்பட்டுள்ள எயார் மார்ஷல் ககன் புலத்சிங்கள, உலங்குவானூர்தி விமானியாக போர்க்களப் பகுதிகளில் பணியாற்றியவர் என்றும், விடுதலைப் புலிகளின் ஆர்.பி.ஜி தாக்குதலில் மயிரிழையில் உயிர்தப்பியவர் என்றும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

பொறுப்புக்கூறல், நல்லிணக்கத்தை சிறிலங்கா உறுதிப்படுத்த வேண்டும் – ஜெனிவாவில் அமெரிக்கா

பொறுப்புக்கூறல் மற்றும் நல்லிணக்கத்தை உறுதிப்படுத்தும் செயற்பாடுகளை சிறிலங்கா அரசாங்கம் தொடர்ந்து முன்னெடுக்க வேண்டும் என்று அமெரிக்கா தெரிவித்துள்ளது.

சிறிலங்கா விவகாரத்தில் மீண்டும் எரிக் சொல்ஹெமுக்கு இடமில்லை – மங்கள சமரவீர

சிறிலங்கா விவகாரத்தில் நோர்வேயின் முன்னாள் சமாதானத் தூதுவர் எரிக் சொல்ஹெய்ம் எந்தப் பங்கையும் வகிக்கவில்லை என்று சிறிலங்கா வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீர தெரிவித்துள்ளார்.

செப்ரெம்பருக்கு முன் உள்நாட்டுப் பொறிமுறையை உருவாக்க வேண்டும் – ஐ.நா மனித உரிமை ஆணையாளர்

பொறுப்புக்கூறல் மற்றும் நல்லிணக்கத்துக்கான சிறிலங்கா அரசாங்கத்தின் உள்நாட்டுப் பொறிமுறை, வரும் செப்ரெம்பர் மாதம் நடக்கவுள்ள ஐ.நா மனித உரிமைகள் பேரவையின் அடுத்த கூட்டத்தொடருக்கு முன்னர் உருவாக்கப்பட வேண்டும் என்று ஐ.நா மனித உரிமை ஆணையாளர் செயிட் ராட் அல் ஹுசேன் வலியுறுத்தியுள்ளார்.

வித்தியா படுகொலை சந்தேகநபர்களை பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் விசாரிக்க நீதிமன்றம் அனுமதி

புங்குடுதீவில் மாணவி வித்தியாவை வன்புணர்வுக்குட்படுத்தி படுகொலை செய்த வழக்கில், கைது செய்யப்பட்ட சந்தேகநபர்கள் ஒன்பது பேரை, பயங்கரவாத தடுப்பு பிரிவில் ஒரு மாதம் தடுத்து வைத்து விசாரிக்க ஊர்காவற்துறை நீதிமன்றம் இன்று உத்தரவிட்டுள்ளது.

2.2 பில்லியன் டொலருக்கு ஆயுதங்களை வாங்கியுள்ளது சிறிலங்கா – அனைத்துலக அமைப்பு

தெற்காசியாவில் ஆயுதப் போட்டி வலுப்பெற்றிருப்பதாகவும், கடந்த சில ஆண்டுகளில் சிறிலங்காவும் கூட, 2.2 பில்லியன் டொலர் பெறுமதியான ஆயுதங்களை இறக்குமதி செய்திருப்பதாகவும், ஸ்ரொக்ஹோம் அனைத்துலக அமைதி ஆய்வு நிறுவனம் தெரிவித்துள்ளது.

கோத்தாவின் தந்திரோபாய நகர்வு – இந்தியன் எக்ஸ்பிரஸ்

வரும் நாடாளுமன்றத் தேர்தலில் தனது சகோதரரான மகிந்த ராஜபக்ச அதிகாரத்தைக் கைப்பற்றும் வரையில், தாம் தேர்தல் அரசியலில் இருந்து ஒதுங்கியிருக்க சிறிலங்காவின் முன்னாள் பாதுகாப்புச் செயலர் கோத்தாபய ராஜபக்ச தீர்மானித்திருப்பதாக, தமக்குத் தகவல்கள் கிடைத்துள்ளதாக இந்தியன் எக்ஸ்பிரஸ் செய்தி வெளியிட்டுள்ளது.