மேலும்

பிரிவு: செய்திகள்

யாழ்ப்பாணத்தில் 15 கட்சிகள், 6 சுயேச்சைக் குழுக்கள் போட்டி

யாழ்ப்பாண தேர்தல் மாவட்டத்தில் 7 உறுப்பினர்களைத் தெரிவு செய்வதற்காக வரும் ஓகஸ்ட் மாதம் நடைபெறவுள்ள நாடாளுமன்றத் தேர்தலில், 15 அரசியல் கட்சிகளும், 6 சுயேச்சைக் குழுக்களும் போட்டியிடுவதாக, யாழ். மாவட்ட தெரிவத்தாட்சி அதிகாரி நா.வேதநாயகன் தெரிவித்தார்.

வன்னி தேர்தல் மாவட்டத்தில் 18 அரசியல் கட்சிகள், 10 சுயேச்சைக் குழுக்கள் களத்தில்

வரும் ஓகஸ்ட் மாதம் 17ஆம் நாள் சிறிலங்கா நாடாளுமன்றதுக்கு நடைபெறவுள்ள தேர்தலில் வன்னி தேர்தல் மாவட்டத்தில், மொத்தம் 28 அரசியல் கட்சிகள் மற்றும் சுயேச்சைக் குழுக்கள் போட்டியிடுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

மட்டக்களப்பில் 46 அரசியல் கட்சிகள், சுயேச்சைக் குழுக்கள் போட்டி

வரும் ஓகஸ்ட் மாதம் நடைபெறவுள்ள நாடாளுமன்றத் தேர்தலில் மட்டக்களப்பு மாவட்டத்தில் மொத்தம் 46 அரசியல் கட்சிகள் மற்றும் சுயேச்சைக் குழுக்கள் போட்டியில் குதித்துள்ளன. இன்று நண்பகலுடன் வேட்புமனுத் தாக்கல் நிறைவடைந்ததையடுத்து, மட்டக்களப்பு மாவட்டத் தெரிவத்தாட்சி அதிகாரி பி.எஸ்.எம். சாள்ஸ் இதனைத் தெரிவித்தார்.

யாழ்ப்பாணத்தில் பெண்களுக்கு இடமளிக்காத ஜனநாயகப் போராளிகள்

சிறிலங்கா நாடாளுமன்றத் தேர்தலில் யாழ்ப்பாண மாவட்டத்தில் ஜனநாயகப் போராளிகள் கட்சியின் சார்பில் போட்டியிட சுயேச்சைக் குழுவொன்று வேட்புமனு தாக்கல் செய்துள்ளது.

ஆனந்தசங்கரி கொழும்பில் வேட்புமனு – வடக்கை விட்டு ஓட்டம்

தமிழர் விடுதலைக் கூட்டணியின் தலைவர் வீ.ஆனந்தசங்கரி வரும் நாடாளுமன்றத் தேர்தலில், கொழும்பு மாவட்டத்தில் போட்டியிடுவதற்காக இன்று வேட்புமனுவைத் தாக்கல் செய்துள்ளார்.

கொழும்பில் சிறுபான்மை வேட்பாளர்களை ஓரம்கட்டியது ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி

கொழும்பு மாவட்டத்தில் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி இம்முறை சிறுபான்மையின வேட்பாளர்களுக்கு உரிய இடமளிக்காமல் ஓரம்கட்டியுள்ளது.

மகிந்த ராஜபக்ச வேட்புமனுவைக் கையளிக்க வரவில்லை

வரும் நாடாளுமன்றத் தேர்தலில் குருநாகல மாவட்டத்தில் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் முதன்மை வேட்பாளராகப் போட்டியிடும், சிறிலங்காவின் முன்னாள் ஆட்சியாளர் மகிந்த ராஜபக்ச, வேட்புமனுவைக் கையளிக்க குருநாகல மாவட்டச் செயலகத்துக்கு வரவில்லை.

யாழ்.மாவட்டத்தில் இன்று மட்டும் 20 வேட்புமனுக்கள் தாக்கல்

வரும் ஓகஸ்ட் மாதம் 17ஆம் நாள் நடைபெறவுள்ள சிறிலங்கா நாடாளுமன்றத் தேர்தலில், யாழ்ப்பாண தேர்தல் மாவட்டத்தில் போட்டியிடுவதற்காக இன்று மட்டும், 11 அரசியல் கட்சிகளும், 09 சுயேச்சைக் குழுக்களும் வேட்புமனுக்களைத் தாக்கல் செய்துள்ளன.

நாடாளுமன்றத் தேர்தல் குறித்த மைத்திரியின் சிறப்பு அறிக்கை இன்று வெளிவருமா?

நாடாளுமன்றத் தேர்தல் தொடர்பான தனது நிலைப்பாடு குறித்து சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன இன்று வேட்புமனுத் தாக்கல் முடிந்த பின்னர், சிறப்பு அறிக்கை ஒன்றை வெளியிடுவாரா என்பது தொடர்பில் குழப்பமான தகவல்கள் வெளியாகியுள்ளன.

வடக்கு, கிழக்கில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள முஸ்லிம் அரசியல்வாதிகளின் கட்சித்தாவல்

நாடாளுமன்றத் தேர்தலுக்கான வேட்புமனுத் தாக்கல் இன்றுடன் நிறைவடையவுள்ள நிலையில், கடந்த ஓரிரு நாட்களில் வடக்கு, கிழக்கில் முஸ்லிம் அரசியல்வாதிகள் பலர் கட்சி தாவியுள்ளனர்.