மேலும்

பிரிவு: செய்திகள்

சம்பந்தனிடம் தேசியப் பட்டியல் ஆசனம் கோரும் மூதூர் முஸ்லிம்கள்

கிழக்கில், மட்டுமன்றி வட-கிழக்கிலும் கூட முஸ்லிம் ஒருவரை முதலமைச்சராக ஏற்றுக் கொள்வதற்கு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தயாராகவே இருக்கிறது என்று கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் தெரிவித்துள்ளார்.

அமெரிக்க அதிகாரிகள் அழுத்தம் கொடுக்கவில்லை – முதலமைச்சர் விக்னேஸ்வரன்

இனப்படுகொலை விவகாரத்துக்கு முக்கியத்துவம் அளிக்காமல் அடக்கி வாசிக்குமாறு, அமெரிக்காவின் உதவி இராஜாங்கச் செயலர் நிஷா பிஸ்வால் தமக்கு அழுத்தம் கொடுத்ததாக வெளியான செய்தியை வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் நிராகரித்துள்ளார்.

சிறிலங்கா – இந்தியா இடையிலான மேம்பாலத்துக்கு ஆசிய அபிவிருத்தி வங்கி பச்சைக்கொடி

இராமேஸ்வரத்தையும் தலைமன்னாரையும் இணைக்கும் தலைவழிப்பாதையை அமைப்பதற்கு ஆசிய அபிவிருத்தி வழங்கி நிதி உதவி வழங்கத் தயாராக இருப்பதாக இந்திய அரசாங்கத்துக்குத் தெரிவித்துள்ளது.

முப்படைகளின் தளபதிகளுடன் யாழ்ப்பாணத்தில் சிறிலங்கா பாதுகாப்புச் செயலர்

சிறிலங்காவின் பாதுகாப்புச் செயலர் பி.எம்.யு.டி.பஸ்நாயக்க இரண்டு நாள் அதிகாரபூர்வ பயணமாக, முப்படைகளின் தளபதிகளுடன் யாழ்ப்பாணம் வந்துள்ளார்.

மட்டக்களப்புக்கு இரண்டரை அடி நீளமான வாக்குச்சீட்டு

வரும் நாடாளுமன்றத் தேர்தலுக்காக மட்டக்களப்பு மாவட்டத்துக்கு சுமார் இரண்டரை அடி நீளமான (30 அங்கும்) வாக்குச்சீட்டு அச்சிடப்படுவதாக சிறிலங்கா அரசாங்க பதில் அச்சகர் ஏ.ஜி.பொன்சேகா தெரிவித்துள்ளார்.

மகிந்தவைப் போட்டியிட அனுமதித்த மைத்திரியின் மர்மம் – உபுல் ஜோசப் பெர்னான்டோ

மகிந்தவினதும் சீனாவினதும் நிலைப்பாடு ஒத்திசைவாகவே காணப்படும் நிலையில்,  மகிந்த ராஜகபக்சவிற்கு மைத்திரிபால சிறிசேன ஏன் தேர்தலில் போட்டியிடுவதற்கு அனுமதித்தார் என்பது இரகசியமாகவே உள்ளது.

அமைச்சர் பௌசி தான் சிறிலங்காவின் அடுத்த பிரதமரா?

அடுத்த பிரதமர் பதவியை சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன தனக்குத் தந்தால் அதனை மகிழ்ச்சியுடன் ஏற்றுக் கொள்ளத் தயார் என்று தெரிவித்துள்ளார் அனர்த்த முகாமைத்துவ அமைச்சர் ஏ.எச்.எம்.பௌசி.

தமிழ் அரசியல்வாதிகளைக் கொன்ற முதல்தரக் கொலைகாரன் யார்? – கருணாவிடம் ஆதாரங்கள்

தமிழ் அரசியல்வாதிகள் பலரைப் படுகொலை செய்த முதல்தரக் கொலைகாரனுக்கு ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் வேட்பாளர் பட்டியலில் இடம் அளிக்கப்பட்டுள்ளதாக குற்றம்சாட்டியுள்ளார் முன்னாள் பிரதி அமைச்சர் கருணா எனப்படும் விநாயகமூர்த்தி முரளிதரன்.

கே.பி. மீதான நடவடிக்கை குறித்து பரிந்துரைக்க அதிபர் ஆணைக்குழு

விடுதலைப் புலிகளின் சர்ச்சைக்குரிய முன்னாள் ஆயுதக் கொள்வனவாளர் கே.பி.எனப்படும் குமரன் பத்மநாதன் குறித்த பரிந்துரைகளை மேற்கொள்வதற்கு அதிபர் ஆணைக்குழு ஒன்று நியமிக்கப்பட்டுள்ளதாக, சிறிலங்காவின் பிரதி நீதி அமைச்சர் சுஜீவ சேனசிங்க தெரிவித்துள்ளார்.

மைத்திரிக்குப் பதிலடி கொடுக்க மறந்துபோன மகிந்த

சிறிலங்காவின் முன்னாள் ஆட்சியாளர் மகிந்த ராஜபக்ச, நேற்று அனுராதபுரவில் மைத்திரிபால சிறிசேனவுக்கு பதிலளிப்பதாக கூறியிருந்த போதிலும், நேற்றைய பரப்புரைக் கூட்டத்தில் அனுபற்றி வாய்திறக்கவில்லை.