மேலும்

பிரிவு: செய்திகள்

மகிந்தவைப் பிரதமராக்கும் கோசத்துடன் அனுராதபுரவில் தொடங்கியது பரப்புரை

ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் முதலாவது தேர்தல் பரப்புரைக் கூட்டம் இன்று மாலை சிறிலங்காவின் முன்னாள் ஆட்சியாளர் மகிந்த ராஜபக்ச தலைமையில் அனுராதபுரவில் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியில் அங்கம் வகிக்கும் தலைவர்கள் பங்கேற்றிருந்தனர்.

துறைமுக நகரத் திட்டத்தை நிறுத்துமாறு அழுத்தம் கொடுத்தார் அஜித் டோவல் – கோத்தா குற்றச்சாட்டு

சீனாவின் முதலீட்டில் மேற்கொள்ளப்படும் கொழும்புத் துறைமுக நகரத் திட்டத்தை நிறுத்துமாறு மகிந்த ராஜபக்ச அரசாங்கத்திடம், இந்தியப் பாதுகாப்பு ஆலோசகர் அஜித் டோவல், அழுத்தம் கொடுத்தார் என்று, சிறிலங்காவின் முன்னாள் பாதுகாப்புச் செயலர் கோத்தாபய ராஜபக்ச தெரிவித்துள்ளார்.

150 பிக்குகள் போட்டியிடுவதால் தேர்தல் திணைக்களத்துக்கு நெருக்கடி

வரும் நாடாளுமன்றத் தேர்தலில் 150இற்கும் அதிகமான பௌத்த பிக்குகளும் போட்டியில் இறங்கியுள்ளதால், வாக்களிப்பு நிலையங்களை அமைப்பதில் தேர்தல்கள் திணைக்களத்துக்கு நெருக்கடி ஏற்பட்டுள்ளது.

மட்டக்களப்பு மாவட்டத்துக்கு மிகநீண்ட வாக்குச்சீட்டு

சிறிலங்கா நாடாளுமன்றத்துக்கு நடைபெறவுள்ள தேர்தலில் இம்முறை மிக நீளமான வாக்குச்சீட்டு மட்டக்களப்பு மாவட்டத்துக்கே அச்சிடப்படவுள்ளது. அடுத்தமாதம் 17ஆம் நாள் நடைபெறவுள்ள நாடாளுமன்றத் தேர்தலுக்கான வாக்குச்சீட்டுகளை அச்சிடும் பணிகளில் தேர்தல்கள் திணைக்களம் தீவிரமாக ஈடுபட்டுள்ளது.

அனுராதபுரவில் இன்று பரப்புரையை ஆரம்பிக்கிறார் மகிந்த – மைத்திரிக்கு பதிலடி கொடுப்பார்

ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் தேர்தல் பரப்புரை இன்று அனுராதபுரவில் முன்னாள் ஆட்சியாளர் மகிந்த ராஜபக்சவின் தலைமையில் ஆரம்பமாகவுள்ளது.

மைத்திரியின் உரைக்குத் தடைவிதித்தார் மகிந்த

சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன கடந்த செவ்வாய்க்கிழமை மகிந்த ராஜபக்சவுக்கு எதிராக வெளியிட்ட கருத்தை, இலத்திரனியல் ஊடகங்கள் திரும்பத் திரும்ப ஒளிபரப்புவதற்கு தேர்தல்கள் ஆணையாளர் மகிந்த தேசப்பிரிய தடைவிதித்துள்ளார்.

எதிர்க்கட்சித் தலைவர் செயலகத்தில் இருந்த மைத்திரியின் படம் அகற்றப்பட்டது

கொழும்பு 7இல் உள்ள எதிர்க்கட்சித் தலைவரின் செயலகத்தில் மாட்டப்பட்டிருந்த சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேனவின் படம் திடீரென அகற்றப்பட்டுள்ளது.

லண்டனில் முதல்வர் விக்னேஸ்வரன் – பிரித்தானிய வெளிவிவகார இணை அமைச்சரைச் சந்திப்பு

பிரித்தானியாவுக்கான பயணத்தை மேற்கொண்டுள்ள வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன், பிரித்தானிய வெளிவிவகாரப் பணியக இணை அமைச்சர் ஹியூகோ ஸ்வயரைச் சந்தித்துப் பேச்சு நடத்தியுள்ளார்.

வடக்கின் மனித உரிமைகள் நிலையில் பெரிய முன்னேற்றமில்லை – பிரித்தானியா கவலை

சிறிலங்காவில் 2015ஆம் ஆண்டின் முதல் அரையாண்டில், மனித உரிமைகள் நிலைமையில் முன்னேற்றங்கள் ஏற்பட்டுள்ள போதிலும், சில கவலைக்குரிய விடயங்கள் தொடர்வதாக பிரித்தானிய வெளிவிவகாரப் பணியகம் தெரிவித்துள்ளது.

சீனாவின் கடன்களை ரத்துச் செய்யும் திட்டமில்லை – என்கிறது சிறிலங்கா அரசாங்கம்

சீனாவிடம் பெறப்பட்ட கடன்களை ரத்துச் செய்யும் திட்டம் எதுவும் சிறிலங்கா அரசாங்கத்துக்கு கிடையாது என்று அமைச்சரவைப் பேச்சாளர் ராஜித சேனாரத்ன தெரிவித்தார்.