மேலும்

பிரிவு: கட்டுரைகள்

மேற்கையும் சீனாவையும் சமாளித்தல் – தற்கால அனைத்துலக அரசியல், பொருளாதார நோக்கு

வல்லரசுகள் தமது நலன்களை பேணும் போக்கில் கவனம் கொண்டுள்ளன. அரசியல்வாதிகள் தமது பதவிகளை பேணுவதில் கவனம் கொண்டுள்ளனர். மக்களும் தமது நலன்களின் அடிப்படையிலேயே வாழ விரும்புவர். இந்நிலையில் கடந்த காலங்களில் வாழ்ந்த தியாகம் மற்றும் தன்னலமற்ற போராட்டம் என்பன இப்பொழுது தமிழ் மக்கள் மத்தியில் வெறும் பேச்சுப்பொருளாக மாறும் அபாயமே உள்ளது .

ரணிலின் பொறியில் இருந்து தப்பிய சீனா – உபுல் ஜோசப் பெர்னான்டோ

சிறிலங்கா பிரதமர் ரணில் விக்கிரமசிங்க அண்மையில் சீனாவிற்கு அதிகாரபூர்வ பயணம் மேற்கொண்டமையானது, சிறிலங்கா மீது இந்தியா கோபங்கொண்டிருந்த 1983-1987  காலப்பகுதியில் ஜே.ஆர்.ஜெயவர்த்தனவினால் காமினி திசநாயக்கா இந்தியாவிற்கு அனுப்பப்பட்ட செயலுக்கு ஒப்பானதாகும்.

ஜப்பான்- சீன அதிகாரப் போட்டிக்குள் சிக்கிக் கொள்ளுமா சிறிலங்கா?

சிறிலங்கா மீதான சீனாவின் செல்வாக்கு அதிகரித்துள்ள நிலையில், தற்போது ஜப்பானும் சிறிலங்கா மீதான தனது கவனத்தை அதிகரிக்கத் தொடங்கியுள்ளது.  இலங்கைத் தீவின் கரையோர பாதுகாப்புச் செயற்பாடுகளை மேற்கொள்வதற்கு ஜப்பான் சாதகமான பங்களிப்பை வழங்கி வருவதன் மூலம் சிறிலங்கா மீதான தனது செல்வாக்கை அதிகரிக்கத் தொடங்கியுள்ளது.

சிறிலங்காவில் நடந்த போர் – நுணுக்கமாக ஆய்வு செய்யும் அமெரிக்கா

தமது எதிர்காலப் போர்களுக்காக, அமெரிக்காவுக்கு வெளியே, நடக்கும் போர்கள் மற்றும் இராணுவ விவகாரங்களை ஆராய்வதற்காக, வெஸ்ற் பொயின்ற் அதிகாரிகள் உலகம் முழுவதிலும் முன்னர் பயணங்களை மேற்கொண்டு வந்தனர்.

எல்லாளனின் சமாதி அனுராதபுரவில் உள்ளதா?

இலங்கையின் தமிழ் அரசனான எல்லாளனின் சமாதியானது அனுராதபுர மாவட்டத்தில் காணப்படுவதாகக் கூறப்படும் தகவலில் உண்மையில்லை என வரலாற்று ஆய்வாளரும் பேராசிரியருமான எஸ்.பத்மநாதன் தெரிவித்தார்.

சீன வெளிவிவகார அமைச்சரின் பயணம் இரகசியமாக வைக்கப்பட்டது ஏன்?- உபுல் ஜோசப் பெர்னான்டோ

தெற்கு மற்றும் மத்திய ஆசிய விவகாரங்களுக்கான அமெரிக்காவின் உதவி இராஜாங்கச் செயலர் நிஷா பிஸ்வாலின்  சிறிலங்கா நோக்கிய அவசர பயணமானது எவ்வித நோக்கமுமற்றது எனக் கருத முடியாது. ஏனெனில்  பிஸ்வாலின் இராஜாங்கத் திணைக்களம் மைத்திரி – ரணில் அரசாங்கம் தொடர்பாக அண்மைய சில மாதங்களாகப் பெற்றுக் கொண்ட அறிக்கைகள் பாராட்டத்தக்கவையாக இருக்கவில்லை.

இந்தியாவுக்கு கவலையை ஏற்படுத்தியுள்ள சீன- சிறிலங்கா நெருக்கம்

சிறிலங்காவிற்கு இவ்வாண்டு அதிகளவில் வெளிநாட்டு உதவியை வழங்கிய சீனா, தொடர்ந்தும் சிறிலங்காவின் அபிவிருத்திக்கு ‘முழுமையான ஒத்துழைப்பை’ வழங்குவேன் என உறுதியளித்துள்ளது. இந்தியாவின் அதிருப்தி வலுவடைந்து வரும் நிலையிலும் சீனா இவ்வாறானதொரு உறுதியை வழங்கியுள்ளது.

சிறிலங்காவில் ஆழமாகும் இராணுவமயமாக்கல்

பொது மக்கள் மற்றும் இராணுவத்தினரை உள்ளடக்கும் வகையில் அபிவிருத்தி நிறுவனம் ஒன்றை உருவாக்குவதற்கான அனுமதியை சிறிலங்காவின் அமைச்சரவை அண்மையில் வழங்கியுள்ளது. இந்த அறிவிப்பை கொழும்பிலுள்ள அமைச்சரவைப் பேச்சாளர் கயந்த கருணாதிலக வெளியிட்டார்.

ஒபாமாவின் ஏமாற்றமளிக்கும் சிறிலங்கா பற்றிய கொள்கை

ஐ.நா மனித உரிமைகள் பேரவையால் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தை சிறிலங்கா எவ்வளவு தூரம் நிறைவேற்றியுள்ளது என்பது தொடர்பாக யூன் 29 அன்று இடம்பெற்ற மனித உரிமைகள் பேரவையின் 32வது கூட்டத்தொடரின் போது ஆராயப்பட்டது.

அடுத்த ஐ.நா பொதுச்செயலர் யார்?

ஐக்கிய நாடுகள் சபையின் ஒன்பதாவது செயலாளர் நாயகத்தைத் தெரிவு செய்வதற்கான ஏற்பாடுகள் தற்போது நடைபெற்று வருகின்றன. ஐ.நா சபையின் தற்போதைய செயலாளர் நாயகம் பான் கீ மூனின் பதவிக் காலம் 31 டிசம்பர் 2016 அன்று முடிவுறவுள்ள நிலையிலேயே அடுத்த செயலாளர் நாயகத் தெரிவிற்கான ஏற்பாடுகள் ஆரம்பமாகியுள்ளன.