இன்னுயிர் ஈந்தோர் அனைவரையும் நெஞ்சில் ஏந்துவோம்
கனவுகளை சுமந்து களமாடி மடிந்தோர் எத்தனை? முகமறிந்தோரும் முகமறியாதோருமான அனைவரும் ‘போராளிகள்’ ‘மாவீரர்கள்’ என ஒரு முகம் கொண்டனர்.
கனவுகளை சுமந்து களமாடி மடிந்தோர் எத்தனை? முகமறிந்தோரும் முகமறியாதோருமான அனைவரும் ‘போராளிகள்’ ‘மாவீரர்கள்’ என ஒரு முகம் கொண்டனர்.
கடந்த ஓகஸ்ட் 18ம் நாள் ‘புதினப்பலகை’ செய்தித்தளம் முடங்கிப்போனது. எங்கள் தொழில்நுட்ப அறிவும் சொற்பமானது என்பதால் என்ன நடந்தது என்பதை ஊகிக்கவே முடியவில்லை. பதட்டமாகவே இருந்தது. அரைமணி, கால்மணி நேர இடைவெளியில் புதினப்பலகையை திறப்பதற்காக முயற்சித்து முயற்சித்து களைத்துப்போனோம்.