மேலும்

செய்தியாளர்: கி.தவசீலன்

அட்மிரல் விஜேகுணரத்னவை கைது செய்ய நீதிவான் உத்தரவு

பாதுகாப்பு அதிகாரிகளின் பிரதானியான அட்மிரல் ரவீந்திர விஜேகுணரத்னவை கைது செய்ய நடவடிக்கை எடுக்குமாறு குற்றப் புலனாய்வுப் பிரிவுக்கு, கோட்டே நீதிவான் நீதிமன்ற நீதிவான், லங்கா ஜெயரத்ன நேற்று உத்தரவிட்டார்.

அவுஸ்ரேலியாவின் புதிய பிரதமர் மொறிசனுக்கு சிறிலங்கா பிரதமர் வாழ்த்து

அவுஸ்ரேலியாவின் புதிய பிரதமராகத் தெரிவு செய்யப்பட்டுள்ள ஸ்கொட் மொறிசனுக்கு சிறிலங்கா பிரதமர் ரணில் விக்கிரமசிங்க வாழ்த்துத் தெரிவித்துள்ளார்.

புத்தர் பிறந்த லும்பினிக்கும் செல்கிறார் சிறிலங்கா அதிபர்

கௌதம புத்தர் பிறந்த லும்பினிக்கு சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன பயணம் மேற்கொள்ளவுள்ளார். இந்தப் பயணத்தை சிறிலங்கா அதிபர் உறுதிப்படுத்தியுள்ளார் என்று நேபாள உள்துறை அமைச்சு  அதிகாரி ஒருவர் காத்மண்டு போஸ்ட் நாளிதழுக்குத் தெரிவித்துள்ளார்.

வடக்கு- கிழக்கில் பாரிய வீதி அபிவிருத்தி திட்டம் – இந்தியாவுடன் சிறிலங்கா பேச்சு

வடக்கு, கிழக்கில் பாரிய வீதி அபிவிருத்தி திட்டத்தை முன்னெடுப்பது குறித்து இந்திய அரசாங்கத்துடன் சிறிலங்கா அரசாங்கம் கலந்துரையாடியுள்ளதாக கொழும்பு ஆங்கில நாளிதழ் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.

முப்படையினரைக் கட்டுப்படுத்தாத சிறிலங்காவின் குடிவரவுச் சட்டங்கள்

குடிவரவு குடியகல்வுத் திணைக்களத்துக்குத் தெரிவிக்காமல், சிறிலங்காவின் ஆயுதப்படை அதிகாரிகள் வெளிநாட்டுக்குச் செல்வதற்கு அதிகாரம் உள்ளதாக குடிவரவு, குடியகல்வுத் திணைக்களத்தின் கட்டுப்பாட்டாளர் நிகால் ரணசிங்க தெரிவித்துள்ளார்.

இன்று வியட்னாம் பயணமாகிறார் சிறிலங்கா பிரதமர்

இந்தியப் பெருங்கடல் கருத்தரங்கில் பங்கேற்பதற்காக, சிறிலங்கா பிரதமர் ரணில் விக்ரமசிங்க இன்று வியட்னாம் தலைநகர் ஹனோய்க்கு செல்லவுள்ளார்.

ஆர்ப்பாட்டங்கள், கலகங்களை அடக்கத் தயாராகும் சிறிலங்கா காவல்துறை

சிறிலங்கா காவல்துறை ஆர்ப்பாட்டங்கள், கலகங்களை அடக்குவதற்குத் தேவையான பெருமளவு கண்ணீர்ப் புகைக் குண்டுகள், உயர் தொழில்நுட்ப தலைக்கவசங்கள், இறப்பர் குண்டாந்தடிகள் போன்றவற்றைக் கொள்வனவு செய்யவுள்ளது.

மகிந்தவை அழைக்க மெதமுலானவுக்குச் சென்ற சுப்பிரமணியன் சுவாமி

இந்தியாவின் பாரதீய ஜனதா கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் சுப்ரமணியன் சுவாமி, மெதமுலானவில் உள்ள மகிந்த ராஜபக்சவின் இல்லத்துக்குச் சென்று, அவரைச் சந்தித்துள்ளார்.

ஜப்பானுடன் பாதுகாப்பு ஒத்துழைப்பு உடன்பாடு- சிறிலங்கா பிரதமர் வலியுறுத்தல்

சிறிலங்காவுக்கும் ஜப்பானுக்கும் இடையில் பாதுகாப்பு ஒத்துழைப்பை வலுப்படுத்தும் புரிந்துணர்வு உடன்பாட்டின் முக்கியத்துவத்தை சிறிலங்கா பிரதமர் ரணில் விக்ரமசிங்க வலியுறுத்தியுள்ளார்.

மகிந்தவின் இளைய சகோதரர் திடீர் மரணம்

சிறிலங்காவின் முன்னாள் அதிபர் மகிந்த ராஜபக்சவின் இளைய சகோதரரான சந்திர ருடோர் ராஜபக்ச தங்காலையில் இன்று மரணமானார் என்று ராஜபக்ச குடும்ப வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.