மேலும்

செய்தியாளர்: கி.தவசீலன்

ருக்கி பெர்னான்டோவிடம் கட்டுநாயக்க விமான நிலையத்தில் தீவிர விசாரணை

பிரித்தானியாவில் நடைபெறவுள்ள மனித உரிமை மாநாடு ஒன்றில் பங்கேற்கச் சென்ற சிறிலங்காவின் மனித உரிமைச் செயற்பாட்டாளர் ருக்கி பெர்னான்டோ, கட்டுநாயக்க விமான நிலையத்தில் புலனாய்வுப் பிரிவினரால் தடுத்து வைக்கப்பட்டு தீவிர விசாரணைக்கு உட்படுத்தப்பட்டார்.

சமஸ்டித் தீர்வில் மக்கள் ஆர்வம் கொண்டிருக்கவில்லை – லால் விஜயநாயக்க

சமஸ்டித் தீர்வில் மக்கள் ஆர்வம் கொண்டிருக்கவில்லை என்று, அரசியலமைப்பு திருத்தத்துக்கான மக்கள் கருத்தறியும் குழுவின் அறிக்கையில் பரிந்துரைத்துள்ளதாக, அந்தக் குழுவின் தலைவர் லால் விஜேநாயக்க தெரிவித்துள்ளார்.

கூண்டுக்குள் அடைக்கப்பட்ட கோத்தா

அவன்கார்ட் பாதுகாப்பு நிறுவன வழக்கில் குற்றம்சாட்டப்பட்டுள்ள சிறிலங்காவின் முன்னாள் பாதுகாப்புச் செயலர் கோத்தாபய ராஜபக்ச நேற்று, நீதிமன்றக் காவல் கூண்டுக்குள் சிறிது நேரம் அடைத்து வைக்கப்பட்டார்.

புதிய அரசியலமைப்பில் ஒற்றையாட்சி தொடர வேண்டும் – மல்வத்தை மகாநாயக்கர்

புதிய அரசியலமைப்பில் ஒற்றையாட்சி மற்றும் பௌத்த மதத்துக்கான முன்னுரிமைகள் பாதுகாக்கப்பட வேண்டும் என்று மல்வத்தை பீடத்தின் மகாநாயக்கர் வண. திப்பொட்டுவாவே சிறி சுமங்கல தேரர் தெரிவித்துள்ளார்.

சிறிலங்கா அரசியலில் புதிதாக உருவாகவுள்ளது தேசிய இராணுவக் கட்சி

எதிர்வரும் தேர்தல்களில் தேசிய இராணுவ கட்சி என்ற பெயரில் புதிய கட்சி ஒன்றை உருவாக்கி போட்டியிடவுள்ளதாக, சிறிலங்கா இராணுவத்தில் இருந்து ஓய்வுபெற்ற மேஜர் அஜித் பிரசன்ன  தெரிவித்தார்.

சிறிலங்கா தொடர்பான ஐ.நாவின் நிலைப்பாடு தெளிவானது – பான் கீ மூனின் பேச்சாளர்

சிறிலங்கா தொடர்பான ஐ.நாவின் நிலைப்பாடு தெளிவானது. அதில் எந்த மாற்றமும் இல்லை என்று ஐ.நா பொதுச்செயலரின் பேச்சாளர் பர்ஹான் ஹக் தெரிவித்துள்ளார்.

ஒற்றுமை, தேசிய நலன்களைப் பாதுகாக்க தயார் நிலையில் இருக்கிறோம் – சிறிலங்கா இராணுவத் தளபதி

நாட்டின் ஒற்றுமை மற்றும் தேசிய நலன்களைப் பாதுகாக்க இராணுவம் தயாராக இருக்கிறது என்று சிறிலங்கா இராணுவத் தளபதி லெப்.ஜெனரல் கிரிசாந்த டி சில்வா தெரிவித்தார்.

இந்திய அமைச்சரின் வருகைக்கு எதிராக கொழும்பில் ஆர்ப்பாட்டம்

இந்திய மத்திய வர்த்தக இணை அமைச்சர் நிர்மலா சீத்தராமனின் சிறிலங்கா பயணத்துக்கு எதிர்ப்புத் தெரிவித்து, கொழும்பில் நேற்று ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது.

10 ஆண்டுகளுக்குப் பின் மோசமான வீழ்ச்சியை சந்தித்துள்ள சிறிலங்காவின் தேயிலை உற்பத்தி

சிறிலங்காவின் தேயிலை உற்பத்தி 10 ஆண்டுகளுக்குப் பின்னர் மோசமான வீழ்ச்சியைச் சந்தித்துள்ளதாக, சிறிலங்கா தேயிலைச் சபையின் தரவுகள் தெரிவிக்கின்றன.

சிறிலங்காவுக்கு காலக்கெடு விதிக்கவில்லை – இந்திய அமைச்சர் கூறுகிறார்

எந்த உடன்பாட்டையும் செய்து கொள்ளுமாறு சிறிலங்கா இந்தியாவை வற்புறுத்தவில்லை என்றும், எட்கா உடன்பாட்டைச் செய்து கொள்வதற்கு காலவரம்பு எதையும் விதிக்கவில்லை என்றும் இந்திய வர்த்தக இணை அமைச்சர் நிர்மலா சீத்தாராமன் தெரிவித்துள்ளார்.